டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்க்கு படித்து கொண்டிருக்கும் உங்களுக்கு எப்பொழுதும் அடுத்தது என்ன நோக்கு இருக்க வேண்டும். குரூப் 4 தேர்வு முடிந்து விட்டதும் அப்பாடான்னு ஒய்வு எடுக்க செல்ல வேண்டாம். இன்னும் மூன்று மாதத்தில் உங்களுக்கான அடுத்த குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியடப்படும் அதனை நோக்கி படியுங்கள் கேள்வி பதில்கள் தயாராக இருக்கின்றது.

1. சுதேசி இயக்கம் என்றால் என்ன?

1கர்சனின் வங்க பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வகையில் காங்கிரஸ் சுதேசி இயக்கம் ஒன்றை ஆரம்பித்தது
2 சுதேசி இயக்கம் 1885 காங்கிரஸ் தோற்றத்தினால் தோன்றியது
3 பூரண சுதந்திரம் பெற ஆரம்பிக்கப்பட்டது
விடை:1கர்சனின் வங்க பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வகையில் காங்கிரஸ் சுதேசி இயக்கம் ஒன்றை ஆரம்பித்தது
விளக்கம் :
கர்சனின் வங்கபிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் சுதேதி இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். அந்நிய நாட்டு பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவ்வியக்கம் மீண்டும் காந்தியடிகளால் புத்தூயிர் பெற்றது.

2. ஜனகன மன பாடல் எப்பொழுது இந்தியாவில் முதன்முறையாக பாடப்பட்டது

1 1911 ஜன கணமன பாடல் பாடப்பட்டது
2 1947 இல் இப்பாடல் பாடபெற்றது
3 1922 இல் இப்பாடல் பாடப்பெற்றது
விடை: 1 1911 ஜன கணமன பாடல் பாடப்பட்டது
விளக்கம்
: கவிஞர் இரவிந்தரநாத் எழுதிய ஜனகன மன பாடல் 1911 இல் பாடப்பட்டது. பி. என். தார் தலைமையில் நடைபெற்ற கல்கத்தா மாநாட்டில் முதன்முறையாக பாடப்பெற்றது.

3. இந்திய தலைநகரம் டில்லியாக கல்கத்தாவிலிருந்து எப்பொழுது மாற்றப்பட்டது ?

11909 இல் தில்லி தலை நகராக அறிவிக்கப்பட்டது
2 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது
3 1947 இல் சுதந்திர காலத்தில் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
விடை:2 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி இந்தியாவின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது
விளக்கம் :
1911இல் டிசம்பர் 12 இந்தியாவின் தலைநகராக தில்லி அறிவிக்கப்பட்டது. 1912ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற காரனேசன் தர்பாரில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் அவரது மனைவி வருகை புரிந்தனர். இந்தியாவிற்கு வருகை தந்த ஒரே கிங் இவரே ஆவார்.

4. அகில இந்திய அளவில் ஏற்பட்ட முதல் போராட்டம் எது?

1. காந்தியடிகள் தலைமை ஏற்ப்பட்ட  ஒத்துழையாமை
2. தண்டி மார்ச்
3. சைமனே திரும்பி போ
விடை: 1 1 காந்தியடிகள் தலைமை ஏற்ப்பட்ட ஒத்துழையாமை
விளக்கம்: காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கம் 1920 முதல் 1922 வரை துவக்கப்பட்டது. இதன் நோக்கம் இந்தியச் சட்டம் 1919 இன் படி நடக்க இருக்கும் தேர்தலை புறக்கணித்தல் . சௌரி சவுர இயக்கத்தால் காந்தி இதனை தன்னிச்சையாக நிறுத்திவிட்டார்.

5. நிதிக்குழுவின் பதவிகாலம் எத்தனை ஆண்டுகள் இருந்தது ?

1 5
2 7
3 2
விடை: 1.5
விளக்கம் :
இந்திய அரசியல் சட்டம் 260ன்படி நம்நாட்டில் குடியரசு தலைவரால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழு அமைக்கப்பட்டது.
நாடாளுமன்ற ஒப்புதலுடன் அமைக்கப்படும் இக்குழுவின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

7. நிதிகுழு என்பது?

1 மத்திய அரசின் ஒர் உறுப்பு
2 மாநில அரசின் ஒர் உறுப்பு
3 தன்னிச்சையான உறுப்பு

விடை: 3.தன்னிச்சையான உறுப்பு
விளக்கம் :
நிதிக்குழு என்பது அனைத்து அதிகாரங்களும் கொண்ட தன்னிச்சையாக செயல்படக்கூடிய சட்டப்படியான அமைப்பாகும்.
நிதிகுழுவின் திட்டம் சாரா நிதிகளை மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வழி செய்கின்றது. முதல் நிதிகுழு 1951 இல் அமைக்கப்பட்டது.

 

7. தேசிய அளவில் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்ய உதவும் நிதிக்கழகங்கள் யாவை?

1 இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம்
2 இந்திய தொழில் முன்னேற்ற வங்கி ,இந்திய தொழில் முதலீட்டு வங்கி
3 இவை அணைத்தும்
விடை: 3. இவை அணைத்தும்
விளக்கம் :
நீண்ட கால தேவைகளை நிறைவேற்ற தொழிற்சாலைகள் சிறப்பு வாய்ந்த நிதி நிறுவனங்களையே அணுக வேண்யுள்ளது. வளரும் நாடுகளில் இந்நிதி நிறுவனங்கள் வளர்ச்சி வங்கிகள் என்று அழைக்கப்படுகின்றது.

7.சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர்?

1 காந்தி

2நேதாஜி 

3 திலகர்

விடை: 3.திலகர்

விளக்கம் : திலகர் அவர்களால் தன்னாட்சி இயக்கத்தின் ஆரம்பத்தில் 1917 நாசிக்கில்  முழக்கமிடப்பட்டது. 

9. நோபல் பரிசு பெற்ற கைலாஸ் சதயார்த்தி எந்த திட்டத்தை வங்க தேசத்தில் தொடங்கினார்

1 100 மில்லியன் பார்100 மில்லியன்
2 100 மில்லியன் பார் 150 மில்லியன்
2 150 மில்லியன் பார் 100 மில்லியன்
விடை1.1 100 மில்லியன் பார்100 மில்லியன்
விளக்கம்
: உலகமெங்குமுள்ள 100 மில்லியன் வறுமையில் வாடும் ஏழை குழந்தைகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்ப்படுத்த 100 மில்லியன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களைத் தயாராக்கும்.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்கவும் 

போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள் படியுங்க

English summary
Article tells about Tnpsc question pravtice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia