மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?

போட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். நேர்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வெறித் தனமாக உழைக்க வேண்டும்.

By Kani

போட்டித் தேர்வில் வெல்வதற்கு சூழ்நிலையை சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்கும் என்பது தவறானது.

நேர்மையாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். தேர்வில் வெற்றி பெற வெறித் தனமாக உழைக்க வேண்டும்.
உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். நாம் ஜெயிப்பதற்கு நாம் தான் காரணம்.

நம்மை முதலில் முழுமையாக நம்பவேண்டும். கொஞ்சம், கொஞ்சமாக இப்பொழுது இருந்தே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த வகையில் உங்களை நீங்களே தயார் படுத்த சில கேள்வி பதில்கள்...

கேள்வி 1: மாதொருபாகன் என்ற நாவலை ஆங்கிலத்தில் "ஒன் பார்ட் வுமன்" என்று மொழிபெயர்த்தவர் யார்?

1. ஓமன குட்டனம்
2. விஸ்வாநாத் நாயர்
3. அனிருத்தன் வாசுதேவன்
4. ரேஸ்மா மோகன்

விளக்கம்: 2010-ம் ஆண்டில் வெளியான மாதொருபாகன் நாவல், திருச்செங்கோடு வட்டார வாழ்க்கை முறை மற்றும் சடங்குகளை களமாகக் கொண்டு எழுதப்பட்டது. அங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழா பற்றிய தகவல்களும் அந்நாவலில் இடம் பெற்றிருந்தன.

2013-ம் ஆண்டு அனிருத்தன் வாசுதேவன் என்பவர், 'ஒன் பார்ட் வுமன்' என்ற பெயரில் இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

விடை: 3.அனிருத்தன் வாசுதேவன்

கேள்வி 2: ஆக்ரா விமான நிலையத்தின் புதிய பெயர் என்ன?

1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்
2. மகாயோகி கோரக்நாத் விமானநிலையம்
3.சர்தார் பட்டேல் விமான நிலையம்
4. சுபாஸ் சந்திரபோஸ் விமானநிலையம்

விளக்கம்: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆக்ரா விமான நிலையத்துக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பெயர் சூட்டுவதென முடிவு செய்யப்பட்டு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

விடை: 1. பண்டித தீன தயாள் உபாத்யாத் விமான நிலையம்

கேள்வி 3: உலக மருத்துவ தரவரிசைப் பட்டியல் 2017-ல் இந்தியா பெற்றுள்ள இடம்?

1. 124
2. 134
3. 144
4. 154

விளக்கம்: சர்வதேச மருத்துவ இதழான "தி லான்ஸெட்', மருத்துவ சேவைகள் குறித்து 195 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 154-ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதில் சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகள், மருத்துவ சேவையில் இந்தியாவைவிட அதிக புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கின்றன.

விடை: 4. 154

கேள்வி 4: 9-வது பிரிக்ஸ் மாநாடு 2017-ல் எந்த நாட்டில் நடந்தது?

1. சீனா
2. இந்தியா
3. ரஷ்யா
4.தென் அமெரிக்கா

விளக்கம்: சீனாவின் ஜியாமென் நகரில் பிரிக்ஸ் அமைப்பின் 9 -வது மாநாடு செப்டம்பர் 3,4.5தேதிகளில் நடைபெற்றது. 2011 ஆண்டிற்கு பிறகு சீனா இம்மாநட்டை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது.

இந்தமாநாட்டில் பிரேசில் அதிபர் மிச்செல் திமர், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி. சீன அதிபர் ஜீ ஜின்பிங் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

விடை: 1. சீனா

கேள்வி 5: கடற்படையை தாக்கி அழிக்க கூடிய " hormuz 2" என்ற ஏவுகணையை எந்த நாடு வெற்றிகரமாக சோதனை செய்தது?

1. ஈரான்
2. இஸ்ரேல்
3. பாகிஸ்தான்
4. இந்தியா

விளக்கம்: 'hormuz 2'300 கி.மீ வரை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. 250 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.

விடை: 1. ஈரான்

கேள்வி 6: அமெரிக்காவின் ' காசினி' விண்கலம் பின்வரும் எந்த கோளை ஆய்வு செய்து வருகிறது.

1. புதன்
2. வெள்ளி
3. வியாழன்
4. சனி

விளக்கம்: சூரியக் குடும்பத்திலுள்ள ஒன்பது கோள்களில் 6-வதாக இருப்பது சனி. இது சூரியனில் இருந்து சுமார் 142 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலத்தை அனுப்பியது.

காசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது. 2017 செப்., 15ம் தேதியுடன் காசினி விண்கலம் செயல்பாடு முடிவுக்கு வந்தது.

விடை: 4.சனி

கேள்வி 7: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க சரணாலயம் அமைக்கப்படவுள்ள மாவட்டம் எது?

1. திருச்சி
2. சிவகங்கை
3. விருதுநகர்
4. தஞ்சாவூர்

விளக்கம்: தமிழகத்தில் முதல் முறையாக நாய்களை பாதுகாக்க ரூ.4 கோடி மதிப்பில் சிவகங்கையில் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

விடை: 2. சிவகங்கை

கேள்வி 8: உலக மலேரியா தினம் என்பது?

1. ஏப்ரல் 22
2. ஏப்ரல் 23
3. ஏப்ரல் 24
4. ஏப்ரல் 25

விளக்கம்: மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது.

அதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும்.

இந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன.

விடை:4.ஏப்ரல் 25

கேள்வி 9: வருணா கடற்படை கூட்டுப்பயிற்சி இந்தியா மற்றும் எந்த நாட்டுடன் நடத்தப்படுகிறது?

1. அமெரிக்கா
2. ரஷியா
3. பிரான்ஸ்
4. இஸ்ரேல்

விளக்கம்: இந்தியா பிரான்ஸ் கூட்டு கடற்பயிற்சி "வருணா"

இந்திய மற்றும் பிரான்ஸ் நாட்டு கடற்படைகள் அரபிக் கடலில் இணைந்து போர்பயிற்சி நடத்த உள்ளன.

1993 முதலே இந்திய பிரான்ஸ் கடற்படைகள் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.2001க்கு பிறகு தான் இந்த பயிற்சிக்கு வருணா என பெயரிடப்பட்டது.

இது வரை 15 முறை இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளன.சென்ற வருடம் 2017ல் அரபிக் கடலோர பகுதியில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இந்தப் பயிற்சில் பிரான்ஸ் நாட்டு நீர்மூழ்கிகள், ஜேன் டி வியன் பிரைகேட் கப்பல் பங்கேற்க உள்ளன.

விடை: 3. பிரான்ஸ்

கேள்வி 10: 2015 -2016 ஆம் ஆண்டிற்கான தொல்காப்பியர் விருது பெற்றுள்ளவர் யார்?

1. மு.வனிதா
2. வெ.பிரகாஷ்
3. இரா.கலைக்கோவன்
4. சு.வெங்கடேசன்

விளக்கம்: செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

2013-2014-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கும், 2014-2015-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் தட்சணாமூர்த்திக்கும், 2015-2016-ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது கலைக்கோவனுக்கும் வழங்கப்பட்டது.

விடை: 3. இரா.கலைக்கோவன்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Group-2 model question paper with answer in tamil
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X