நூலகர் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!

டிஎன்பிஎஸ்சி சார்பில் நடைபெறவிருந்த நூலகர் பணியிடங்களுக்கான தேர்வு மார்ச் 30-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நூலகர் தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி!

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் கடந்த நவம்பர் 11-ஆம் தேதியன்று குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் கடந்த 17ம் தேதியன்று வெளியானது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு முதன்மை எழுத்துத் தேர்வு வரும் வரும் பிப்ரவரி 23-இல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நூலகர் தேர்வு பிப்ரவரி 23-இல் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குரூப் 2 முதன்மைத் தேர்வு காரணமாக, நூலகர் தேர்வுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வணிகத் துறை, வேளாண்மை, அண்ணா நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள நூலகர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்பரவரி 23-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 30ம் தேதியன்று நடைபெறும்.

இதேப்போன்று, தொல் பொருளியல் துறையிலும் காலியாக உள்ள நூலகர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 24-ஆம் தேதிக்குப் பதிலாக மார்ச் 31 அன்று நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Exam Date Changed for librarians exam
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X