அரசுத் துறைகளில் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்காக நடத்தப்படும் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு மே 24 முதல் 31 வரை நடைபெறவிருந்த எழுத்துத் தேர்வு, ஜூன் 8 முதல் 15 வரை நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்காக தேர்வு மையங்கள் டெல்லி உட்பட 33 இடங்களில் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இத்தேர்வு எழுதுவோர் www.tnpsc.gov.in என்ற தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜூன் 3 முதல் ஜூன் 15 தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tnpsc recruitment tamilnadu tamilnadu government government jobs job alerts வேலை வாய்ப்பு அரசு வேலை தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி
English summary
TNPSC departmental exam postponed to June
Story first published: Tuesday, May 21, 2019, 12:37 [IST]


Click it and Unblock the Notifications












