டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு நான்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றிற்கு பொது அறிவு முக்கியம் அவற்றில் நடப்பு நிகழ்வுகளை நாம் அறிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது ஆகும். நடப்பு நிகழ்வுகளை எந்த அளவிற்கு தெரிந்து கொள்கிறோமோ அந்தளவிற்கு நலம் பயக்கும்.

போட்டி தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் படிக்க

1நமாமி பிரம்மபுத்திரா , பிரம்மபுத்திரா நதியை வணங்குதல் திருவிழா எந்த மாநிலத்தில் நடைபெறும்

விடை:அசாம்

2 நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தாவில் இயங்கும் எந்த எரிவாயு மூலம் பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

விடை:சாண எரிவாயு

3 சிறந்த கால்நடை பல்கலைகழக பட்டியலில் தமிழ்நாடு கால்நடை பல்கலைகழகம் எத்தனையாவது இடம்

விடை: முதலிடம்

4 தேசிய உருக்கு கொள்கை 2017ன் நோக்கம் யாது

விடை: உள்நாட்டு திட்டபணிகளில் உள்நாட்டில் தயரான இரும்புகளை பயன்படுத்துவது

5 குஜராத் மாநிலத்தின் முதல் பெண் போலிஸ் டிஜிபியாக பதவியேற்றவர் பெயர் என்ன

விடை: கீதா ஜோக்ரி 

6 அதிகளவு மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் எந்த நாடு முதலிடம் வகிக்கும்

விடை:சீனா முதலிடம்

7 எளிமையான முறையில் தமிழ் கற்க கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள எந்த ஆண்டராய்டு செயலியினை தஞ்சை தமிழ் பல்கலைகழகம் உருவாக்கியுள்ளது

விடை:அரும்பு

8 இந்திய ரூபாய் மற்றும் சீன யுவான் பத்திரங்களை வெளியிட எந்த வங்கி முடிவு செய்துள்ளது

விடை:பிரிக்ஸ்

9 உதய் திட்டத்தில் தமிழகம் இணைந்துள்ளதால் 3 மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் உயரும் என அறிவித்தது யார்

விடை :தமிழக அரசு

10 தொடர்ந்து ஏழாவது முறையாக தேசிய விருதை வென்ற கவிஞர் யார்

விடை:வைரமுத்து

11 இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் பெயர் என்ன

விடை:துஷார் அரொத்

12 கேரளாவில் நதிகளை பாதுகாக்க, கேரள அரசின் நடவடிக்கையாது

விடை: தனி ஆணையம்

சார்ந்த பதிவுகள்:

தமிழ் பாடப்பகுதியினை நன்றாக படிங்க தேர்வை உங்கள் கைவசமாக்குங்க 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு வெல்ல நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு

English summary
here article tell about tnpsc current affairs for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia