போட்டி தேர்வர்களே நடப்பு நிகழ்வுகள் படித்தால் வெற்றிக்கனி பறிக்கலாம்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் நடப்பு நிகழ்வுகளை தொகுத்துள்ளோம் நன்றாக படியுங்கள் . போட்டி தேர்வுக்கான அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்ற தகவலகள் கிடைத்த வண்ணமுள்ளன . படிக்க தொடங்கும் பலர் ஆர்வமுடன் தொடங்கியாச்சு.

டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகள்

குறிப்புகளை எடுத்து காலை மாலை என பல்வேறு பிரிவுகளில் படித்துகொண்டிருக்கின்றனர். வேலைவாய்ப்பு பெறும் கனவு கொண்ட அனைவருக்கும் போட்டி தேர்வுக்கு படிக்க பல்வேறு திட்டங்கள் இருக்கும் .

திட்டங்களை விதவிதமாக தீட்டினால் மட்டும் போதாது ஒவ்வொரு நாளும் திட்டத்தின் படி படிக்கிறிர்களா என்பதை ஆய்வு செய்யுங்கள் , தேர்வர்களே உங்களால் தீட்டப்பட்ட திட்டம் ஒருவாரத்தில் 33% விகிதம் கூட பின்ப்பற்ற முடியவில்லையெனில் அந்த திட்டத்தை விடுத்து அடுத்து எளிதாக திட்டமிடுங்கள் அதனை பின்ப்பற்ற முழுமூச்சோடு இறங்க வேண்டும்.

போட்டி தேர்வை வெல்ல உற்சாக நேரம் உறங்கும் நேரம் பிரித்துவிடுங்கள் அதன்படி படியுங்கள் . நிச்சயம் நீங்கள் வெற்றி பெறலாம்.

1 எங்கு பசுமை விமான நிலையம் கீரீன் பீல்டு அமைக்க மத்திய அரசு அறிவிப்பு

விடை: சென்னை

2 தமிழ்நாட்டிலேயே திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டம் எது

விடை: கன்னியா குமரி

3 பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பெண்கள் குழு அமைத்துள்ள மாநிலம்

விடை: திரிபுரா

4 முதல் அலைபேசி கூடுகை புதுடெல்லியில் செப்டம்பரில்27 முதல் 29 வரை எங்கு நடைபெற்றுது

விடை: புது டெல்லி

5 ஐஎன்எஸ் தாராசா எனப்படும் போர்க் கப்பல் எந்த கடற்ப்படையிலிருந்து நாட்டிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது

விடை: மும்பை கடற்படை தளம்

6 அணு உலைகள் நிறுவுவதில் இந்தியா எத்தனையாவது இடம்

விடை: மூன்றாவது இடம்

7 நாட்டிலேயே முதன் முறையாக ஆதார் எண்ணுடன் கூடிய வருகை பதிவை அறிவித்துள்ள மாநகராட்சி எது

விடை: புனே மாநகராட்சி

8 ஆப்ரேஷன் அர்ஜூன் எதனை குறிப்பிடுகின்றது

விடை ஆப்ரேஷன் அர்ஜூன் இந்தியாவில் ஊடுருவும் எல்லைத்தாண்டிய பாகிஸ்தான் இராணுவ துப்பாக்கி சூட்டை எதிர்த்து இந்திய இராணுவத்தால் நடத்தப்படுகிறது.

9 பசுகளுக்கான சரணாலம் நாட்டில் எங்கு உருவாக்கப்பட்டது

விடை: மத்திய பிரதேசம்

10 மத்திய அரசு அனைத்து மாநில நடவடிக்கைகளையும் கணினி மயமாக்கி காகித பயன் இல்லாத திட்டத்தை என்ன பெயரில் அறிவித்தது

விடை: இ- விதான் திட்டம்

English summary
here article contained current events for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia