போட்டி தேர்வுக்கு நடப்புகேள்விபதில்களை தினசரி படிக்க வேண்டும் .
போட்டி தேர்வின் முக்கியப் பதிவுகளை படிக்கும் பொழுது தொடர்ந்து படிக்க நிகழ்வுகள் மனதில் இருக்கும் . கேள்விகளை வடிவமைக்க நேரடியாக அறிந்து கொள்ளலாம் . வெற்றிக்கணியை எட்டிப்பறிக்க சிலயுக்திகளை கையாண்டால் வெற்றிபெறுவது எளிதாகும் .

தொடர்ந்து செலுத்தும் கவனம் , நேர ஒதுக்கீடு , உட்கிரகித்தல், திறனாய்வு செய்தல் போன்றவை அறிந்து தேர்வுக்கு படிக்கவும் , தேர்வு எழுதும் போதும் பயன்படுத்தலாம் மேற்கூரிய அந்த அந்த குறிப்பு வார்த்தைகளை எங்கு உபயோகிப்பது எப்படி உபயோகிப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் .
நாட்டின் முதல் தபால் நிலைய கடவுசீட்டு மையம் துவக்கப்பட்டது எங்கே
விடை: மத்திய பிரதேசம் , விடிஷா மக்களவை தொகுதி
2 இந்தியாவில் முதல் மலை மிதிவண்டி சாலை எங்கு தொடங்கப்படவுள்ளது
விடை: டார்ஜிலிங்
3 நேபாலுக்கு நீர்மின்சக்தி திட்டத்தின் கீழ் மின்சாரம் பெற இந்தியா மேற்கொண்டுள்ள ஒப்பந்தந்தின் பெயர் என்ன
விடை: அருண் -3
4 தனது மாநிலத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சூரிய மின்சக்திமுறைமைகளை நிறுவுவதை கட்டாயமாக்கியுள்ள மாநிலம்
விடை: ஹரியானா
5 பிப்ரவரி 2017ல் இரயில்வே பாதுகாப்பு தொடர்பாக இந்திய அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள நாடு
விடை: ஜப்பான்
6 நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம் தலைநகர் டில்லியில் எப்பொழுது திறக்கப்பட்டது
விடை: 28.2.2017
7 இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு தலைவர்
விடை: ஏ.எஸ்.கிரண்குமார்
8 எந்த மாநிலத்தின் சட்ட பேரவை தேர்தலில் முதல்முறையாக முஸ்லீம் சமூக பெண் நஜீமா பீவி என்பவர் போட்டியிடுகிறார்
விடை: மணிப்பூர்
9 இந்துக்கள் திருமண மசோதா எந்த நாட்டின் பாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது
விடை: பாகிஸ்தான்
10 இந்தியாவின் முதல் பணமற்ற நகர்வாழ்விடம்
விடை: நர்மதா பள்ளதாக்கு பகுதி , குஜராத்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












