நடப்புநிகழ்வுகளின் தொகுப்பை படிக்கவும் !!!

Posted By:

நடப்பு நிகழ்வுகளுக்கும் ஆட்சிமுறைக்கும் நீண்டதொடர்புண்டு தன் தேசத்தை வழிநடத்தும் அரசன் தேசத்தின் நடப்பு மாற்றத்தை ஏற்கனவே தான் அறிந்த தேச மரபு தன்மையையும் நன்கு அறிந்திருக்க வேண்டும் . போட்டி தேர்வுகளின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டியது அந்த அரசனை போல் தொடர்தல் ஆகும். ஒரு நிகழ்வின் தொடக்கம் மற்றும் அந்த நிகழ்வின் சமிபத்திய பதிவு அந்த குறிப்பிட்ட நிகழ்வின் முக்கிய தன்மை அறிந்திருக்க வேண்டும்.

நடப்பு நிகழ்வுகளை நன்றாக வேர் முதல் நுணிவரை அறிய வேண்டும்

1 தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள எந்த மலை யுனெஸ்கோவின் உயிர்கோள காப்பக பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது

விடை : அகஸ்திய மலை

2 தேங்காய் விளைச்சலில் முதலிடம் பிடித்த மாநிலம்

விடை: தமிழகம்

3 நாட்டிலேயே முதல் முறையாக எங்கு கட்டுமான பணிகளுக்கு மணல் இலவசமாக வழங்கபடுகிறது

விடை: ஆந்திரா

4 இந்திய இரயில்நிலையங்களில் தூய்மையான இரயில் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இரயில் நிலையம் எது

விடை: சூரத் இரயில் நிலையம்

5 இந்தியாவின் முதல் புவியதிர்ச்சி எச்சரிக்கையுடன் கூடிய தலைமை செயலகம்

விடை: ஹரியானா

6 எந்த இருநாடுகளிக்கிடையே ஜெய்டாபூர் அணு பூங்காவில் ஆறு புதிய அணுஆற்றல் நிலையங்கள் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது

விடை: பிரான்சு - இந்தியா

7 ஃபோர்ஸ் 18 இராணுவ ஒத்திகை எனப்படுவது யாது

விடை: மஹாராஷ்டிரா மாநிலம் பூனேவில் நடைபெற்ற 18 ஏசியன் அமைப்பு உறுப்பு நாடுகளின் கூட்டு இராணுவ பயிற்சியாகும்

8 இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் சரக்கு கப்பல் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது

விடை: ஆந்திரா மாநிலம் உள்பட்ட கிருஷணப்பட்டினத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது

9 இராணுவ கண்காட்சி 2016 எங்கு நடைபெற்றது

விடை: கோவா

10 விவசாயிகளுக்கான எந்த மொபைல் அபளிகேஷனை பிரதமர் அறிமுகப்படுத்தினார்

விடை: கிஷான் சுவேதா மொபைல்

English summary
here article tell about tnpsc current affairs question practice

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia