டிஎன்பிஎஸ்சி நடப்பு நிகழ்வுகள் தொகுப்பானது அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. மாணவர்கள் தங்களின் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் மறக்கமாட்டாகள் , பெற்றோர்கள் , வயதுமுதிந்தவர்கள் தங்கள் கடந்துவந்த பாதைகளை மறக்க மாட்டார்கள் அதுபோல்தான் இந்த நடப்பு நிகழ்வுகள் , இது கடந்த வந்த பாதைகள் முழுவதும் நாம் வாழும் பகுதி, சூழல், சார்ந்தது ஆகும் . இவற்றில் உள்ள முக்கியத்துவத்தை நாம் எவ்வாறு உட்கிரகித்து புரிந்துகொள்கிறோமோ அதனை பொறுத்துதான் நமது வெற்றி அடங்கும் . நடப்பு நிகழ்வுகளில் எந்த அளவிற்கு வலிமையாக இருக்கிறோமோ அந்தளவிற்கு அந்தபகுதியில் முழு மதிபெண் பெறுவது எளிதாகும் .

இதோ போட்டி தேர்வு எழுதுவோர்க்கான கேள்வி பதில்களின் தொகுப்பு அறிவோம் .
1 மலிவு விலை காதுகேட்கும் கருவியை கண்டறிந்த இந்திய வம்சாவளி மாணவன் பெயர்
விடை: முகுந்த வெங்கட கிருஷ்ணன்
2 புலிகளை காப்பது பற்றிய அசிய அமைச்சர்கள் அளவிலான 3வது மாநாடு நடைபெற்ற இடம்
விடை: புதுடெல்லி
3 முதலாவது உலக சூஃப்பி மாநாடு நடைபெற்ற இடம் எது
விடை: புதுடெல்லி
4 இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடியில் தேர்தல் அலுவலராக பணியாற்றிய திருநங்கை பெயர் என்ன
விடை: ரியா சர்கார்
5 unbreakable : An Autobiography என்ற நூல் யாருடைய வாழ்கை வரலாற்றை நினைவு படுத்துகிறது
விடை: மேரி கோம் குத்து சண்டை வீராங்கணை
6 டிவிட்டர் சமூக வலைத்தளம் மேற்கொண்ட பெண்களின் மேம்பாடு பற்றிய பிரச்சாரத்தின் வாசகம் என்ன
விடை: # Posistion of Strength
7 ஆசியாவின் முதலாவது அரிசி தொழில்நுட்ப பூங்காவை கொப்பல் மாவட்டம் கங்காவதி நகரில் அமைத்த அரசு
விடை: கர்நாடகா அரசு
8 நாட்டிலேயே முதன்முறையாக பயோ டாய்லட் எனப்படும் உயிரி கழிவறைகள் ஏற்ப்படுத்தப்பட்ட பசுமை ரயில் வழித்தடமாக உள்ளவை
எவை
விடை: மானாமதுரை முதல் ராமேஸ்வரம்
9 ஐஎன்எஸ் அரிகந்த் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏப்ரல் 14 அன்று இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்த் அணுகுண்டை தாங்கி செல்லும் ஏவுகணை பெயர் என்ன
விடை: k-4 ஏவுகணை
10 ஆசியாவிலேயே அதிகநீளமுள்ள மிதிவண்டி நெடுஞ்சாலை
விடை: உத்திரபிரதேசம்
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












