எப்படா வரும்னு நினைச்சுட்டு இருந்தீங்களா...! அதான் அறிவிப்பு வந்துட்டுல... போய் தயாராகுங்க பாஸ்... இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு...! மொத்தம் 92 காலிப் பணியிடங்களுக்கு தான் அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஆணையம் என்பதையும், போட்டி அதிகம் இருக்கும் என்பதையும் மறந்துடாதீங்க.
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
மேலாண்மை : மாநில அரசு
பணி : துணை ஆட்சியர், மாவட்ட பதிவாளர், பதிவுத்துறை
மொத்த காலிப் பணியிடங்கள் : 92
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.08.2022

பணியிடங்கள் / காலியிடங்கள் எண்ணிக்கை
துணை ஆட்சியர் (Deputy Collector) - 18
துணை போலீஸ் சூப்பிரண்டு (வகை - I) (Deputy Superintendent of Police) - 26
ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பஞ்சாயத்து) /கலெக்டருக்கு தனிப்பட்ட உதவியாளர் (மேம்பாடு) (Assistant Director of RD Dept (Panchayat) /Personal Assistant (Development) to Collector) -7
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் (District Employment Officer) -3
உதவி ஆணையர் வணிகவரித்துறை (சி.டி.) (Asst Commissioner) - 25
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (Deputy Registrar of Co-operative Societies) - 13
கல்வித் தகுதி
குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, வணிகம், சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
மேலும் சமூக அறிவியலில், முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும், தொழில்துறை அல்லது தனி நபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைவு பெற்றவராகவும், 39 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் 2,05,700/- வரை ஊதியம் பெற முடியும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஒரு முறை பதிவு கட்டணமாக, ரூ.150ம், முதனிலை தேர்வு கட்டணம் ரூ.100ம், முதன்மை எழுத்துத் தேர்வு கட்டணமாக, ரூ.200 செலுத்த வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
நேர்முக தேர்வு அடங்கிய பதவிகளுக்கு மூன்று நிலைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அதாவது, எழுத்துத் தேர்வு, முதல்நிலை தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதை ஒரு முறை கிளிக் பண்ணுங்க...! நேராக விண்ணப்பிக்கும் பகுதிக்கு உங்களை அழைத்து செல்லும்.
https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==
டி.என்.பி.எஸ்.சி., அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல...!
அறிவிப்பு குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள கீழே பாருங்க...!
chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://tnpsc.gov.in/Document/tamil/GROUP-I_Notfication_Tamil.pdf