டிஎன்பிஎஸ்சியின் குரூப்4 தேர்வு தேதி அறிவிப்பு குஷியில் தேர்வர்கள்...!!

தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இன்று (ஜன. 30) அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு இன்றே விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/1_2024-Tam.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வுத்தேதி வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் குஷியாக உள்ளனர்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி கிராம நிர்வாக அலுவலர் (விஏஒ), இளநிலை உதவியாளர், வனக் காப்பாளர், வன காவலர், தட்டச்சர் உள்ளிட்ட 6,244 காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

தேர்வர்கள் www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகிய டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக இன்று முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சியின் குரூப்4 தேர்வு தேதி அறிவிப்பு குஷியில் தேர்வர்கள்...!!

இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே பெறப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 28.02.2024, இரவு 11.59 மணி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பம் சரிபார்த்தல் நாள் 04.03.2024 ஆகும்.
அதிகாலை 12.01 மணியில் இருந்து 06.03.2024, இரவு 11.59 மணி வரை உள்ளது. தேர்வை பொறுத்த அளவில், வரும் ஜூன் 9ம் தேதி நடைபெறும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு, மதியம் 12.30 வரை நடைபெறும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், விண்ணப்பிக்கும் நபர் முதலில் அதில் தங்களது பெயர்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். 04.03.2024 முதல் 06.03.2024 வரையிலான 3 நாட்களில், தேர்வு எழுதுவோர் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்களை செய்து கொள்ளலாம். அதன் பின்னர் திருத்தங்களை செய்ய முடியாது.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழக வன துறைக்கு உட்பட்ட வன பாதுகாவலர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வன பாதுகாவலர், வன கண்காணிப்பாளர் மற்றும் வன கண்காணிப்பாளர் (பழங்குடியின இளைஞர்) போன்ற பல பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

தேர்வை பொறுத்த அளவில், செல்போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை தங்களுடன் கொண்டு வர கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் மொத்தம் 6,244 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது.

3 மணிநேரம் நடைபெறக் கூடிய இந்தத் தேர்வானது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதில்10-ம் வகுப்பு அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும். பகுதி ஏ-யில் 100 கேள்விகள் (150 மதிப்பெண்கள்) தமிழ் பாடத்தில் கேட்கப்படும். பகுதி பி-யில் பொது படிப்புகள் (75 கேள்விகள்), ஆப்டிடியூட் தேர்வு (25 கேள்விகள்) நடத்தப்படும். இதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும். 200 கேள்விகள் இடம் பெறும். அனைத்து சமூகத்தினருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் 90 என உள்ளது. மேலும் கூடுதலான தகவல்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் மூலம் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் முதலில் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர் ஒரு முறை பதிவில் தன்னை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது அவசியமாகும்.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வுத்தேதி வெளியாகியுள்ளதால் தேர்வர்கள் குஷியாக உள்ளனர்

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Public Service Commission (TNPSC) has released recruitment notification for Group 4 posts on its official website-tnpsc.gov.in. Check notification pdf, eligibility, age limit, selection process, and other details in the website. A total of 6244 vacancies are to be filled through the recruitment drive including Village Administrative Officer, Junior Assistant, Typist, PersonalAssistant, Private Secretary, Bill Collector and others. Interested and eligible candidates can apply online for these posts on or before February 28, 2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+