தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக்காவலர், வனக்காவலர் ஓட்டுநர் பணிகளுக்கான தேர்வு பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வனத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, கடந்த 2019 நவம்பர் மாதம் வனக்காவலர், வனக்காவலர் ஓட்டுநர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியானது. தற்போது, இத்தேர்விற்கான பாடத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வனக்காவலர் பணிக்கு எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இத்தேர்விற்கான விண்ணப்பப் பதிவு வரும் ஜனவரி 3-வது வாரம் முதல் தொடங்கும்.
இதனிடையே தற்போது, வனக்காவலர் பணி தேர்விற்கான பாடத்திட்டம் வனத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பாப்புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு இதற்கான பாடத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதற்கான பாடத்திட்டத்தினை காண இங்கே கிளிக் செய்யவும்.