வனக் காப்பாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்ட வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு வரும் ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

வனக் காப்பாளர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வன அலுவலர், 726 வனக் காப்பாளர்கள் மற்றும் 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் மொத்தம் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.

இதில், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் வனத் துறையின் இணையதளத்தில் கடந்த ஜனவரி 21ம் தேதியன்று வெளியிடப்பட்டது.

ஜன. 28 சான்றிதழ் சரிபார்ப்பு:

இதில், தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு வரும் ஜனவரி 28ம் தேதி முதல் முதல் 30-ஆம் தேதி வரை சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள ஏவி அரங்கில் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இந்நிகழ்வை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர வேண்டும். இதுகுறித்தான மேலும் விவரங்களை அறிய www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNFUSRC Forest Guard CV/Physical Standard Schedule 2018-2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+