தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியாளர்களுக்கான தேர்வு ஏப்ரல் 24, 25, மே 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்தனர்.
தொடர்ந்து, இப்பணியிடங்களுக்கான தேர்வு வரும் ஏப்ரல் 24, 25 மற்றும் மே 1, 2 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள காரணத்தால் விண்ணப்பதாரர்களின் நலன் கருதி இத்தேர்வுகளை ஒத்திவைக்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












