பாலிடெக்னிக் தேர்கள் வரும் மார்ச் 29ம் தேதி முதல் துவங்கப்பட உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இத்தேர்வுகள் முன்கூட்டியே துவங்கப்படுகிறது.

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் 46 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில் 21,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த கல்வியாண்டில் கல்லூரி வேலை நாள்கள் மார்ச் 22-ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதியில் இருந்து தேர்வுகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ம் தேதியன்று ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளதால் பாலிடெக்னிக் தேர்வுகளை முன்கூட்டியே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாலிடெக்னிக் கல்லூரிகளின் பருவத் தேர்வு தேதிகள் மாற்றப்படுகின்றன. மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 29-இல் தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரையில் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து, தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 14 முதல் 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, ஏப்ரல் 22ம் தேதியன்று தொடங்கும் தேர்வுகள், ஏப்ரல் 26ம் தேதி வரை நடைபெறும். செய்முறைத் தேர்வுகள், ஏப்ரல் 22 முதல் மே 5-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், 2, 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 27 முதல் மே 12-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் மே 13 முதல் மே 21-ஆம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












