கணினி ஆசிரியர் நியமனத்தில் 117 இடங்களை நிறுத்திவைத்த பள்ளிக் கல்வித்துறை!

அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 117 காலிப் பணியிடங்களுக்கு யாரையும் தேர்வு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளி கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வில் 117 காலிப் பணியிடங்களுக்கு யாரையும் தேர்வு செய்யாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

கணினி ஆசிரியர் நியமனத்தில் 117 இடங்களை நிறுத்திவைத்த பள்ளிக் கல்வித்துறை!

தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர்கள் பணியிடங்களுக்குக் கடந்த 2019 ஜூன் 23 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது, ஆன்லைன் வழியாக நடைபெற்ற இத்தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து 30 ஆயிரம் போ் பங்கேற்றனர்.

இதனைத்தொடர்ந்து, நவம்பர் 28ம் தேதியன்று இத்தேட்ரவிற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில், தேர்ச்சி பெற்றவர்களின் அசல் சான்றிதழ்கள், 2020 ஜனவரி 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையில் சரிபார்க்கப்பட்டன.

தொடர்ந்து, தேர்வானவர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதில் 697 பேரின் பதிவு எண்கள் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தன. மீதமுள்ள 117 இடங்கள் நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டன.

தற்போது, தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு மூலமாகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN TRB Computer instructor 2020 result released: 117 seats suspended
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X