தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறவுள்ள வட்டார கல்வி அலுவலர் பணி தேர்விற்கான தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்வு மையத்தின் பெயரையும் தெரிந்து கொள்ளும் வகையில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வட்டார கல்வி அலுவலவர் பணியிடத்திற்கான தேர்வு வரும் பிப்ரவரி 14, 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி முறைகேட்டின் எதிரொலியாக, ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதில், தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டில் எந்த மாவட்டம், எந்த நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகும் தேர்வு நுழைவுச் சீட்டில் மட்டுமே தேர்வு மையத்தின் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
தற்போது, கடந்த 7 ஆம் தேதியன்று வட்டார கல்வி அலுவலர் பணி தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டது. அதில் தேர்வு மையத்தின் மாவட்டம், நகரம் மட்டும் குறிப்பிடப்பட்டது.
தற்போது 14 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்விற்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த புதிய ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்விற்கு நுழைவுச் சீட்டு பிப்ரவரி 11 வெளியானது. பிப்ரவரி 16 ஆம் தேதிக்குரிய ஹால்டிக்கெட் (இன்று) பிப்ரவரி 12 வெளியாகிறது.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை பதிவு செய்து வட்டார கல்வி அலுவலர் பணிக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்த மேலும் விபரங்களை அறிய ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.