தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான தேதி விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வட்டார கல்வி அலுவலர் பணியிடத்திற்கான தேர்விற்கு விண்ணப்பிக்கக் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதோடு தேர்வு தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வட்டார கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. இப்பணியிடத்திற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க 09.01.2020 தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனிடையே, பல்வேறு தரப்பினரிடமிருந்து விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்ததால் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, தற்போது விண்ணப்பங்களை 21.01.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு வரும் 2020 பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதியன்று நடைபெறும் என உத்தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












