COVID-19: 10-ம் வகுப்பு தேர் தேதி மாற்றம்! ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்கும்!

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1ம் தேதி முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

COVID-19: 10-ம் வகுப்பு தேர் தேதி மாற்றம்! ஜூன் 15 முதல் தேர்வுகள் தொடங்கும்!

தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதியுடன் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிந்த நிலையில் 11ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் 26ம் தேதி முடியவிருந்தன. ஆனால், கொரோனா நோய் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் 11 மற்றும் 10ம் வகுப்பிற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஒத்தி வைக்கப்பட்ட 10 மற்றும் 11ம் வகுப்பிற்கான தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரையிலும், 11ம் வகுப்புத் தேர்வு ஜூன் 2ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது அவர்களின் மன நிலையை பாதிக்கும் எனவும், சிறிது காலத்திற்கு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மேலும், 10-ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனைத்தொடர்ந்து, இந்தத் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சரின் ஆலோசனைப்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதன்படி, ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பிற்கான சில பாடத் தேர்வுகள் ஜூன் 16-ம் தேதி அன்றும் நடைபெறும் என்றும், 12-ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18-ம் தேதியன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான புதிய அட்டவணை:

  • ஜூன் 15 - மொழிப்பாடம்
  • ஜூன் 17 - ஆங்கிலப்பாடம்
  • ஜூன் 19- கணிதம்
  • ஜூன் 20 - மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)
  • ஜூன் 22 - அறிவியல்
  • ஜூன் 24 - சமூக அறிவியல்
  • ஜூன் 25 - தொழிற்கல்வி தேர்வு
More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN SSLC Exam 2020 TN 10th Public Exam dates postponed to June 15
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+