தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் உள்ள 309 சார்பு ஆய்வாளர் (தொழில்நுட்பம்) காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று நடைபெற்றது.

இந்தத் தேர்வு முடிவு www.tnusrbonline.org என்னும் இணையதளத்தில் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதில், தகுதி மதிப்பெண்கள், அடுத்தகட்ட தேர்வான உடற்கூறு அளத்தல், அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தலுக்குத் தகுதி பெற்ற 899 பேரின் சேர்க்கை எண்கள் வெளியிடப்பட்டன.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற நேர்முகத் தேர்வின் முடிவில் 309 பேருக்கு மருத்துவ சோதனை மற்றும் காவல் விசாரணைக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் சேர்க்கை எண்கள் www.tnusrbonline.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












