தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானதில் கொங்கு மாவட்டங்களே அதிக ஆதிக்கம் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

11ம் வகுப்பு பொதுத் தேர்வானது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இதில் மொத்தம் 8,21,650 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, இத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 08) காலை வெளியானது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
குறிப்பாக, கொங்கு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் தற்போது முதலிடம் பிடித்து இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 98 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அடுத்ததாக 97.9 சதவிகித தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. 97.6 சதவிகிதம் தேர்ச்சியுடன் கோயம்புத்தூர் மாவட்டம் மூன்றாம் இடம் பிடித்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications












