chennai Corporation school students record 2023: பிளஸ் டூ தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி அசத்தல்...?

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில், சென்னை மாநகராட்சி கீழுள்ள பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் 94.14 சதவீதவீம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நடப்பாண்டும், மாணவர்களை விட மாணவியர் அபாரமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், 21 ஆயிரத்து, 139 மாணவர்கள், 23 ஆயிரத்து, 178 மாணவியர் என, மொத்தம், 44 ஆயிரத்து, 317 பேர், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், மே.8ல் வெளியாகின. இவர்களில், 41 ஆயிரத்து, 720 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 94.14 தேர்ச்சி சதவீதம்.

சென்னையில் 94.14 சதவீதம் பேர் பாஸ்...!

சதவீதம் என்ன....!

இதில், பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 25 அரசு பள்ளிகளில், 1,600 மாணவர்கள், 2,631 மாணவியர் என, மொத்தம், 4,231 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் தேர்ச்சி விகிதம் 88.47 சதவீதம்.

சென்னை மாநகராட்சியின் கீழுள்ள 32 மேல்நிலை பள்ளிகளில் 2,626 மாணவர்கள், 3,273 மாணவியர் என, மொத்தம், 5,899 பேர் தேர்வு எழுதினர். அவர்கள் தேர்ச்சி விகிதம் 86.86 சதவீதம்.

இதில், மாநகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள் புலியூர் பள்ளி 100 சதவீதம்; சுப்பராயன் பள்ளி 98.29; நெசப்பாக்கம் பள்ளி 97.89; புல்லா அவென்யூ பள்ளி 97.44; திருவான்மியூர் பள்ளி 95.55 சதவீதம் பெற்று, தேர்ச்சியில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளன.

எம்.எச்., சாலை பெண்கள் பள்ளியில் 592; மார்க்கெட் தெரு பெண்கள் பள்ளி 589; சைதாப்பேட்டை பெண்கள் பள்ளி 587; மடுவாங்கரை பெண்கள் பள்ளி 583; மார்க்கெட் தெரு பெண்கள் பள்ளியில் 582 மதிப்பெண் பெற்று, மாநகராட்சியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து உள்ளன.

இதில் பல்வேறு பாடப்பிரிவுகளில், 71 பேர், 100 மதிப்பெண்பெற்றுள்ளனர். 42 பேர், 99 மதிப்பெண்பெற்றனர். குறிப்பாக கணக்கு பதிவியல் - 25; வணிகவியல் - 20; கணினி பயன்பாடுகள் - 9; பொருளியல் - 7; கணினி அறிவியல் - 3; புவியியல், புள்ளியியல் தலா - 2; வரலாறு, தாவரவியல், வேதியியலில் தலா ஒருவர் என, 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.

மதிப்பெண்கள் என்ன...!

551 முதல் 600 வரை 52 பேரும், 501 முதல் 550 வரை 254 பேரும், 451 முதல் 500 வரை 456 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 24 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரசு பள்ளியான பரந்துார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மட்டுமே, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 133 பேரில் 42 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில், 56.5 சதவீதம், படப்பை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 64.4 சதவீதம், குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 65.6 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளன.

புறநகர் அரசு பள்ளிகள் சாதனை

பல்லாவரம் மறைமலை அடிகள் அரசு பள்ளியில், 139 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 121 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 87.05 சதவீதம்.

ஜமீன் பல்லாவரம் நகராட்சி பள்ளியில் 146 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி விகிதம் 84 சதவீதம். பீர்க்கன்காரணை அரசு பள்ளியில், தேர்வு எழுதிய 246 பேரில், 200 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம்- 80 சதவீதம்.

அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், தேர்வு எழுதிய 216 பேரில், 214 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம், 99 சதவீதம் ஆகும்.

புலியூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு, மேயர் பிரியா பரிசு வழங்கி பாராட்டினார்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Chennai Corporation Schools exam Success Rate 2023: In the Plus 2 public examination released yesterday (May 8) in Tamil Nadu, the pass rate has increased in schools under the responsibility of Chennai Corporation. In Chennai district, as usual, girls have passed more than students. Through this, 94.14 percent have passed in Chennai.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+