10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு: கேள்விகள் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம்!

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இத்தேர்விற்கான கேள்விகள் பாடப்புத்தகத்தில் எங்கிருந்து, எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது.

10, 11, 12 வகுப்பு பொதுத்தேர்வு: கேள்விகள் எங்கிருந்தும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம்!

இதனிடையே, இத்தேர்விற்கான கேள்விகள் பாடப்புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

TN Board Exam தேர்வு அட்டவணை

TN Board Exam தேர்வு அட்டவணை

நடப்பு கல்வியாண்டிற்கான 10, 11 மற்றம் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

பொதுத்தேர்வு 2020 அட்டவணை

பொதுத்தேர்வு 2020 அட்டவணை

இதில், 10 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு 2020 மார்ச் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 11 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு மார்ச் 4ம் தேதியன்று தொடங்கி மார்ச் 26 வரையில் நடைபெறும். அதே போன்று 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு மார்ச் 2 தொடங்கி மார்ச் 24 ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.

தேர்வு முடிவுகள்
 

தேர்வு முடிவுகள்

தேர்வுகளைத் தொடர்ந்து, பொதுத் தேர்விற்கான முடிவுகளும் விரைவிலேயே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 10 வகுப்பு தேர்வு முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மே 14 ஆம் தேதியன்றும், 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதியும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வுத் துறை எச்சரிக்கை

தேர்வுத் துறை எச்சரிக்கை

பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் தயாராகி வரம் நிலையில் அரசுத் தேர்வுத் துறை புது அறிவிப்பை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான கேள்விகள், பாடப்புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

புது பாடத்திட்டம்

புது பாடத்திட்டம்

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் உஷாராணி தரப்பில் வெளியான தகவலின் படி, புதிய பாடத்திட்டத்தின் படி வினாத்தாள்கள் கட்டமைப்பு தயாரிக்காதது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. எனவே, பொதுத்தேர்விற்கான கேள்விகள் எப்படி வேண்டுமானாலும் கேட்கப்படலாம். மாணவர்கள் பாடம் முழுவதுமாக படித்து தயாராக இருத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அச்சத்தில் மாணவர்கள்!

அச்சத்தில் மாணவர்கள்!

அரசுப் பள்ளிகள், மற்றும் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் முந்தைய ஆண்டு பொதுத் தேர்வு கேள்வித் தாளை மாதிரியாகக் கொண்டு தேர்விற்கு தயாராவது வழக்கம். இந்நிலையில், பாடப்புத்தகத்தில் எந்த பகுதியிலிருந்து வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படலாம் என தகவல் வெளியாகியிருப்பது சற்று அச்சத்தை ஏற்படுத்துவதாகக் கருதுகின்றனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Board Exam 2020: 10, 11, 12 Exam Questions will be random from Textbook- Directorate of Government Examinations
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X