8-ம் வகுப்பு பொதுத் தேர்வு! தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!

8ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்கள் வரும் ஜனவரி 27ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசுத் தேர்வுத் துறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

8-ம் வகுப்பு பொதுத் தேர்வு! தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

இதுகுறித்து, அரசுத் தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விரும்பும், 01.01.2020 அன்று 12 ஆண்டுகள் 6 மாதம் வயது நிரம்பிய தனித் தேர்வர்கள் வரும் ஜனவரி 27-ஆம் தேதியன்று முதல் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் http://www.dge.tn.gov.in/ என்னும் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இதற்கான விண்ணப்பக் கட்டணணமாக ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 என சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்தலாம். மேலும், முதன்முறையாக தேர்வெழுத விண்ணப்பிப்போர் ஆன்லைன் விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கெனவே எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தைத் தேர்வெழுத விண்ணப்பிக்க விரும்புவோர் ஏற்கெனவே தேர்வெழுதிப் பெற்ற மதிப்பெண் சான்றிதழின் நகலை இணைத்து சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயம். தனித்தேர்வர்கள் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின்கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்-லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இத்தேர்வு குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.dge.tn.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN 8th: Applications from 8th class Individuals are welcome!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X