தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான (2019-20) 11ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று (பிப்ரவரி 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பள்ளி மாணவ மாணவியர்கள், தனித்தேர்வர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைக்கைதிகள் என சுமார் 8.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேரவில் பங்கேற்றுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி 11ம் வகுப்பிற்கான தேர்வு நடைபெறுகிறது. இதில், தேர்வின் முதல் நாளான இன்று மொழிப்பாடம் தேர்வு நடைபெறுகிறது. பிப்ரவரி 4 தொடங்கியுள்ள இந்த பொதுத்தேர்வு, மார்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 7 ஆயிரத்து 400 பள்ளிகளைச் சேர்ந்த 8.26 லட்சம் மாணவ, மாணவியர்களும், கடந்தாண்டு 11ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 51 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 6,355 தனித்தேர்வர்கள் தேர்வு எழுகின்றனர். 11ம வகுப்பு பொதுத் தேர்விற்கு என தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,016 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












