2018-19ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களும், தனித்தேர்வர்களும் மே 10ஆம் தேதிக்குள் சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியவர்கள் ஜூன் 2019 சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதில் பங்கேற்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மே 6-ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை பள்ளிகள் அல்லது தேர்வு மையங்களில் ஆன்லைன் வழியாக விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.
சிறப்பு துணைப்பொதுத் தேர்வு ஜூன் 14 முதல் 22 வரையில் நடைபெறும். இதற்கு தேர்வுக்கட்டணமாக ரூ.175 செலுத்த வேண்டும்.
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
TN 10th: Applications for SSLC supplementary exam 2019 open from may 6 to 10


Click it and Unblock the Notifications












