பிளஸ் 2 தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Posted By:

சென்னை: பிளஸ் 2 தனித் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 22 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பிளஸ் 2 தனித் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலம் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தனித் தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டு கால அவகாசம் ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தனித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இந்தச் சேவை மையங்களின் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

பிளஸ் 2 தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
plus2 students who wants to write to exams in private can apply for the exam till august 22. Tamilnadu Department of Government exams said in a release.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia