ரிசர்வ் வங்கி தேர்வுக்குத் தயாராவது எப்படி?

Posted By:

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி கிரேட் பி தேர்வுக்குத் தயாராவது எப்படி என்பது தொடர்பாக சில டிப்ஸ்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

நாட்டிலுள்ள அனைத்து வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது இந்திய ரிசர்வ் வங்கி.

நவம்பரில் தேர்வு

ரிசர்வ் வங்கியின் கிரேட் பி தேர்வு வரும் நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. ஏராளமான மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதவுள்ளனர்.

ரிசர்வ் வங்கி தேர்வுக்குத் தயாராவது எப்படி?

எப்படித் தயாராவது?

ஆனால் இந்தத் தேர்வுக்குத் தயாராவது எப்படி என்று பல பேருக்குத் தெரிவதில்லை. தேர்வுக்கு என்னென்ன படிக்கவேண்டும்...எப்படித் தயாராகவேண்டும் என்பதே அவர்களுக்குத் தெரியவில்லை. தேர்வை எதிர்கொள்வது எப்படி, அதன் பலம் என்ன...பலவீனம் என்ன என்பதை, குறித்த நேரத்தில் அதிக மதிப்பெண்களை எப்படிப் பெறுவது என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

கிரேட் பி தேர்வு

ஆர்பிஐ கிரேட் பி தேர்வு பேஸ் 1 பிரிவி்ல் 80 கேள்விகள் அடங்கியிருக்கும்.
பொது விழிப்புணர்வு பிரிவு கேள்விகள் தொடர்பான பகுதிகள் என்சிஇஆர்டி, சிஎஸ்டி, எக்கனாமிக் டைமஸ், தி ஹிந்து பத்திரிகைகள் போன்றவற்றில் கிடைக்கும்.

வேகமாக எழுதவேண்டும்...

தேர்வுகளை வேகமாக எழுதவேண்டும். தேர்வில் உட்கார்ந்து யோசிக்கும்போது நேரம் அதிகமாக செலவாகி தேர்வுகளில் அனைத்துக் கேள்விகளையும் எழுத முடியாமல் போகலாம்.

வினாத்தாள் வங்கிகள்

கடந்தத் தேர்வுகளின் வினாத்தாள் வங்கிகள், ஆர்.எஸ். அகர்வாலின்புத்தகம் போன்றவை இதற்கு உதவும்.

வெர்பல் செக்ஷன்

வெர்பல் செக்ஷன் பகுதி முக்கியமானதாகும்.இதில் 30 கேள்விகள் கேட்கப்படும். இந்தக் கேள்விகள் தொடர்பானவற்றை அறிய என்சிஇஆர்டி ஆங்கிலப் புத்தகங்கள் உதவும்.
இந்தத் தேர்வில் அடுத்த பகுதியானது கணிதம் உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் மொத்தம் 30 கேள்விகள் இருக்கும்.

பேஸ் 2

இதைத் தொடர்ந்து ஆர்பிஐ கிரேட் பி பேஸ் 2-வது பகுதி தேர்வு தொடர்பாக அறியலாம்
முதலாவது தாளில் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்னைகள் தொடர்பான கேள்விகள் இருக்கும். இதற்கு இந்திய பொருளாதாரம் என்ற தலைப்பில் உமா கபிலா எழுதிய புத்தகங்களைப் படிக்கலாம். அதேபோல மிஷ்ரா பூரி எழுதிய புத்தகங்கள், தேவ்ராஜ் ராய், சி.என். சங்கர் ராவ் எழுதிய புத்தகங்களைப் படிக்கலாம்.

பத்திரிகைகள்

மேலும் எக்கனாமிக் டைம்ஸ், பிசினஸ் ஸ்டாண்டர்ட், வார, மாத இதழ்கள் படிக்கலாம். மேலும் செய்திகளைத் தொடர்ந்து கேட்டு வரவேண்டும்.
இரண்டாம் தாள் ஆங்கிலமாக இருக்கும். மூன்றாவது தாள் நிதி மற்றும் நிர்வாகம் தொடர்பாக இருக்கும்.

பின்பற்றவேண்டும்....

ஆர்பிஐ கிரேட் தேர்வு எழுதப் போகும் மாணவ, மாணவிகள் இவற்றை பின்பற்றினால் எளிதில் தேர்வில் வெற்றி பெற முடியும். அதுமட்டுமல்லாமல் தினமும் செய்தித்தாள்களை படித்து வருதல் நலம். அது தேர்வை எதிர்கொள்வதற்கும் பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

English summary
The Reserve Bank of India is the central bank of India and one of the most influential Central Banks in the world. It also happens to be the best paymaster in the country. Lakhs of candidates try to enter in this prestigious organization though the RBI Grade B This year, the RBI Grade B Exam will be conducted on the 21st and 22nd of November. Not just large number but some of the best aspirants make this examination the toughest in the industry. People who are not familiar with the exam pattern are usually in a fix with regard to where to begin with their preparation. The answer may seem obvious to many, but not so obvious to many others. To start with, one should go through the syllabus thoroughly. Later one should read the reference material suggested below. That’s how one would come to know approach for the exam, strengths and weaknesses, and how to score most in given time period.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia