ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கான தகுதி மதிப்பெண்களை திடீரென அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு போதாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின் படி எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் இனி தேர்ச்சி மதிப்பெண் மட்டும் பெற்றால் ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் சேர முடியாது. குறைந்தது 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும். மேலும் பொதுப்பிரிவினருக்கு 50 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி படிப்புகளை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித் துறையை சேர்ந்த ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடைபெற்று வருகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவுள்ள நிலையில் jமிழக அரசின் சார்பில் திடீரென ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தரமான ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பயிற்சி படிப்புக்கான தேர்வில், தேர்ச்சி பெற கூடிய அளவில் மதிப்பெண்கள் பெற்றால் போதும் என இருந்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ஆசிரியர் பயிச்சி படிப்புகளில் சேர விரும்பினால், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் 45 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அரசாணை நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல பி.சி., உள்ளிட்ட பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் 50 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு முதல் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 30 சதவிகிதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருந்தால் அந்த பள்ளியை மூடிவிட வேண்டும் உள்ளிட்ட அதிரடியான உத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications












