அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றியடைய வேண்டும் என்பது கட்டாயம். அதன்படி, கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு நடத்தப்படவில்லை.

நீதிமன்றத் தடையின் காரணமாக ஆசிரியர் பணியிடத்திற்காக தயாரான பி.எட்., மற்றும் பிளஸ்-2 முடித்துவிட்டு ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானோர் எப்போது தேர்வு நடத்தப்படும் என காத்திருந்தனர். இந்நிலையில் 2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வுக்கான (டிஇடி) அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேர்வின் மூலம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களும், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களும் நியமனம் செய்யப்படுவர்.
தேர்வுத் தாள் விபரம்:-
தாள் 1 : 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டுகள் ஆசிரியர் பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறமுடியும். இத்தேர்வானது மொத்தம் 150 மதிப்பெண்களைக் கொண்டது.
தாள் 2 : பட்டப்படிப்புடன், 2 ஆண்டு பி.எட் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ச்சி பெறுவோர் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்பை பெறலாம்.
வயதுவரம்பு : 18 வயது முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணம் :
- பொது மற்றும் பிசி பிரிவினருக்கு - ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
- எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- தாள் -1, தாள்- 2 என தனித்தனியே விண்ணபிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி : 15.03.2019
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 05.04.2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://trb.tn.nic.in/TET_2019/tett2019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












