வரிகள் எவ்வாறு விதிக்கப்படுகின்றன இந்தியாவில் விதிக்கப்படும் வரிமுறை அறிவோம்

Posted By:

மத்திய மாநில்அரசின் வருவாய்கள் எவை எவையென அறிந்து கொள்வது அவசியமகும் . இது அனைத்து துறைகளையும் வளப்படுத்தும் ஒன்றாகும் ஒரு நாட்டின் வளர்ச்சி அந்த நாட்டின் பொருளாதாரத்தின் வளர்சிக்கு உதவும் ஒன்றாகும்.

வரிகளின் முகவரி

வரிகள் வசூலிக்கும் உரிமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.
சில வரிகள் மத்திய அரசு விதித்தும் மாநில அரசு பெற்று வருகின்றது.
ஒருசில வரிகளை மாநில அரசு விதித்து வசூலிக்கின்றது
மத்திய மாநில அரசுகளுக்கிடையே இசைவான நல்லிணக்க நிதித் தொடர்பை ஏற்படுத்த நிதிக்குழு அமைக்கப்படுகின்றது.

வரி :

ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்திடும் மற்றும் செலுத்த வேண்டிய தொகை வரி எனப்படும். வரி செலுத்துபவருக்கு வருமான இழப்பாகும். ஆனால் ஒரு குடிமகன் செலுத்தும் வரியானது பொது சொத்துக்களை பராமரிக்கவும். பொது இடத்தில் தேவையன அடிப்படை வசதிகளை கொண்டு செயல்படும்.

வரிகள் வகைகள்:

வரிகள் நேர்முக வரி, மறைமுக வரிகள் என்று அழைக்கப்படுகின்றது. இந்தியாவில் வழக்கத்திலுள்ள வரிவிதிப்பு முறைகள் ஆகும். விகித முறை வரிகள், வளர்விகித வரிகள், தேய்வு வித வரிகள், மீதவளர் வீத வரிகள் ஆகும்.

நேர்முக வரிகள்:

தனிநபர்கள் வருமானம் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும். வருமான வரி, நிறுவன வரி, பண்ணை வரி, செலவு வரி போன்ற வரிகள் நாட்டில் உள்ளன.

வரிகள் வகைகள்:

தனிநபர்கள் வருமானம் சொத்துக்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் நேர்முக வரிகளாகும். வருமான வரி, நிறுவன வரி, பண்ணை வரி, செலவு வரி போன்ற வரிகள் நாட்டில் உள்ளன.

மறைமுகவரிகள் :

பண்டங்கள் மற்றும் பணிகளின் மீது விதிக்கப்படும் வரிகள் மறைமுக வரிகளாகும்.
கேளிக்கை வரி, சுங்க தீர்வைகள், மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, பணிகள் வரி, ரயில் பேருந்து கட்டணங்கள் மீதான வரி போன்றவை அடங்கும்.
விற்பனையார்கள் தான் விற்கும் பண்டங்கள் விலை மதிப்பின் அடிப்படையில் விற்பனை வரிகளை செலுத்துகிறார்.
தான் விற்கும் பண்டங்களின் விலையின் மீது இந்த வரிச்சுமையை கூட்டி விற்று விருகிறார். பண்டங்கள் வாங்குவோர் மீது விதிக்கப்படும் வரி மறைமுக வரிகள் எனப்படுகின்றன.

 

 

விகித வரி விதிப்புமுறை :

ஒருவரின் வருமானத்தின் அளவு எவ்வளவு அதிகமானாலும் , குறைந்தாலும் அந்த நபர் மீது விதிக்கப்பட்ட வரிவிதிப்பு முறை மாறாமல் விதிக்கப்படுவது விகிதவரி விதிப்பு முறையாகும்.

வளர்வீத விதிப்பு முறை:

ஒருவரின் வருமானம் அல்லது சொத்து மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க வரியின் அவர்மீது விதிக்கப்படும் வரியின் வீதமும் அதிகப்படும். நம்நாட்டில் விதிக்கப்படும் வருமான வரி வளர்வீத வரிவிதிப்பு முறையைச் சார்ந்தது.

தேய்வு வரி விதிப்புமுறை:

வருமானம் உயரும் போது செலுத்த வேண்டிய வரிவீதம் குறைந்தால் அது தேய்வு வரிவிதிப்பு முறை எனப்படும். இம்முறையில் செல்வந்தர்களை விட ஏழைகள் மீது அதிக வரிச்சுமை விழுகிறது. இதனால் ஏழைகளின் உண்மை வருவாய் குறைகின்றது.

மிதவளர் வீத வரிவிதிப்பு முறை:

விகித முறை வரிவிதிப்பு வளர்வீத வரிவிதிப்பு முறைகள் ஆகிய இரண்டும் சேந்ததே மித வளர்வீத வரிவிதிப்பு முறையாகும். இவற்றில் வருமானம் அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்த்ப் பின் சீரான நிலையை அடைகின்றது. இந்த நிலையில் வருமானம் உயர்ந்தாலும் வரிவீதம் உயர்வதில்லை. பேரூந்து   கட்டணம் எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

மத்திய அரசு வரிகள்:

வேளாண்மை வருமானம் தவிர்த்து மற்ற வருமானங்களின் மீதான வருமான வரிகள். ஏற்றுமதி உள்ளிட்ட வரிகள். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படட் புகையிலை, மது வகைகள், இதர பண்டங்கள், ஆகியவற்றின் மீது விதிக்கப்படும். வரிகள் நிறுவனங்களின் மீதான வருமான வரிகள், மூலதன வரிகள், பண்னை வரிகள், இருப்பாதை, கடல்வழி வான்வழி மீது கொண்டு செல்லும் சரக்குகள் மீதான வரிகள், பங்கு வியாபாரத்தின் மீது விதிக்கப்படும் வரிகள் அத்துடன் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தக வரிகள்.

மாநில அரசுகள் :

நில வருவாய் , வேளாண்மை வருவாய், வேளாண்மை வருவாய் மீது விதிக்கப்படும் வரிகள், வேளாண்மை சொத்துக்கள் , வரிகள், வேளாண்மை சொத்துக்கள் வாரிசுகளுக்கு மாறும் போதும் விதிக்கப்படும் வரிகள், பண்டங்கள் மீதான விற்பனை வரிகள், மது வகைகளின் மீதான வரிகள், ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு பண்டங்கள் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது வரிகள், ஊர்திகள் மீது விதிக்கப்படும் வரிகள் போன்ற வரிகள் மாநிலத்தின் விதிக்கப்படும் வரிகளாகும்.

கேள்வி தொகுப்புகள் :

வரிகள் மற்றும் அவைகளின் வகைகள் அத்துடன் வரிகள் சார்ந்த அனைத்தும் அறிந்தோம். வரிப் பகுதிகளிலிருந்து கேட்படும் வரிகள் நேர்முகவரிகள். 

1. நேர்முக வரி என்றால் என்ன?

2 மறை முகவரி என்றால் என்ன?

3 இந்தியாவில் பின்ப்பற்றப்படும் வரிமுறை யாது?

4 வரிகளின் வகைகள் யாவை?

5 மத்திய மாநில அரசினால் விதிக்கப்படும் வரிகள் யாவை?

 

சார்ந்த பதிவுகள்:

மேக் இன் இந்தியா திட்டம் அறிவோம் நிறைய மார்க்குகள் மேக் செய்வோம் 

வறுமை ஒழிப்பு திட்டங்களும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளும்

English summary
Article tells about Tax and tax details for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia