தமிழகத்தில் இன்றும், நாளையும் “டான்செட்” நுழைவுத் தேர்வு

Posted By:

சென்னை: பொறியியல் மற்றும் எம்பிஏ, எம்சிஏ முதுகலை படிப்புகளுக்கான டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு உதவி பெரும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் 2015 - 2016ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கு இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் “டான்செட்” நுழைவுத் தேர்வு

எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு இன்றும், எம்இ, எம்டெக் படிப்புகளுக்கு நாளையும் இந்த நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. எம்சிஏவுக்கு காலை 10 மணி முதல் 12 மணிவரையும், எம்பிஏவுக்கு பிற்பகல் 2.30 முதல் 4.30 வரையும் தேர்வு நடைபெறுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக் கழகம், திருச்சி, ஈரோடு, சிதம்பரம், மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. முதுநிலை பொறியில் பட்டப்படிப்புகளுக்கு நாளை நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் 41 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

English summary
TANCET entrance examination started in Tamil Nadu today for MBA, MCA and engineering PG courses.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia