11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு!

11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்குப் பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும்.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு, 6 பாடங்களுக்குப் பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11, 12-ம் வகுப்பு தேர்வில் புதிய மாற்றம்- இனி 500 மதிப்பெண்களுக்கு தான் தேர்வு!

தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

  • 11 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்குப் பதில் 500 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும்.
  • 600 மதிப்பெண்கள் முறையும் அமலில் இருக்கும். மாணவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு எழுதலாம்.
  • இனி 5 பாடங்கள் அடிப்படையில் 10-ம் வகுப்பைப் போலவே 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத முடியும்.
  • பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியல், கணிதப்பாடங்களை படிக்க முடியும்.
  • பொறியியல் படிக்க விரும்புவோர் உயிரியல் பாடம் படிக்க தேவையில்லை.
  • மருத்துவ படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியல், உயிரியல் பாடங்களைத் தேர்வு செய்து படிக்கலாம்.
  • மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் கணிதம் படிக்க தேவை இல்லை.
  • வணிகவியல், கணக்குப்பதிவியலில் கணினி தொழில்நுட்பப் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு இனி வரும் காலங்களில் 500 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும். இந்த நடைமுறை 2020-2021 கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்படும்.

தற்போது உள்ள 600 மதிப்பெண்கள் முறையும் நடைமுறையில் இருக்கும். 500 மதிப்பெண் முறையும் நடைமுறையில் இருக்கும். இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Government Revised 11th & 12th std students exam Marks
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+