12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு!

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

By Saba

12ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூலை 10) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

12-ம் வகுப்பு துணைத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு!

கடந்த 2019 ஜூன் மாதம், 12ம் வகுப்பிற்கான துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், தேர்வு முடிவுகளைத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் புதன்கிழமை (ஜூலை 10) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வர்கள் www.dge.tn.nic.in என்னும் இணையதளத்தில் உள்ள provisional mark sheet - HSE second year result - june 2019 என்னும் பக்கத்தினை click செய்து, தனித் தேர்வர்கள் தங்களது பிறந்த தேதி மற்றும் பதிவெண் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம், அவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிவும்.

மேலும், ஜூன் 2019, தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் உரிய முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஜூலை 11 மற்றும் 12 ஆகிய ரு தினங்களில் நேரில் சென்று உரிய கட்டணம் (விடைத்தாள் நகல் (ஒவ்வொரு பாடத்துக்கும்) -ரூ.275, மறுகூட்டல் (உயிரியல் பாடத்துக்கு - ரூ.305) (ஏனைய பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.205) செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

விண்ணப்பித்த பின் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வுத் துறையால் அறிவிக்கப்படும் தேதியில் விடைத்தாள்களின் நகல்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும், மறுகூட்டல் குறித்து அறியவும் முடியும். இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu 12th Provisional Marksheet 2019 Download Online at www.dge.tn.nic.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X