டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ் கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வின் வெற்றி ஜாலத்தில் அதிக பங்கு கொண்டது மொழிப்பாடம் ஆகும். அது சிறப்பாக இருக்க வேண்டும் அது எந்தளவிற்கு சரியாக படித்து உள்ளங்கையில் வைக்கிறோமோ   அந்த அளவிற்கு சிறப்பாக வெற்றி பெறலாம். டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற எந்த பாடத்தில் வலிமை கொண்டு சிறந்து விளங்குகிறோமோ அந்தளவிற்கு அந்த பாடத்தில்   நாம் வலிமைத்தன்மையை என்றும் தக்க வைத்து கொள்ள வேண்டும் அப்பொழுது   வெற்றியை பெற முடியும் நாம் அதனை உபயோகிக்கும் முறை மிக அவசியம் ஆகும் .

டிஎன்பிஎஸ்சிக்கு படிக்கிறிங்களா தமிழ்வினாவிடையை மறக்காம படிங்க

1 குட்டி கந்தபுராணம் எனப்படுவது

விடை: கந்தர் கலிவெண்பா

2 நறுந்தொகை என அழைக்கப்படும் நூல் எது

விடை: வெற்றி வேற்க்கை

3 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
  மன்ம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
  மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
   கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் இவையனைத்தும் இடம்பெற்றுள்ள பகுதி

விடை: உலகநீதி 

4 கற்பனை கலஞ்சியம் என போற்றப்படுபவர்

விடை : சிவபிரகாசர்

5 ஆத்திக்சூடி என்பதன் பொருள் யாது

விடை: ஆத்திப்பூமாலையை சூடிய சிவபெருமான்

6 மன்னர் உலகத்தே மலர்தலை வையம் என்று கூறியவர்

விடை: ஔவையார்

7 காரியாசனின் மாணக்கர் யார்

விடை: ஏலாதி நூலை எழுதிய கணிமேதாவியர் ஆவர்

8 நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று குறிப்பிடப்படும் எனும் சொற்றொடரில் குறிக்க பெறும் நூல்கள்

விடை: நாலடியார் , திருக்குறள்

9 இசைப்பாட்டு என அழைக்கப்படும் நூல்

விடை: கலித்தொகை

10 தென்னாடுடைய சிவனே போற்றி , எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது

விடை: திருவாசகம்

சார்ந்த பதிவுகள்: 

மொழியறிவை பலப்படுத்தி போட்டி தேர்வை வெல்லுங்கள் !!  

நடப்புநிகழ்வுகளின் தொகுப்பு போட்டி தேர்வுகளை வெல்லும் காரணி !!

பொதுத்தமிழ் பாடத்தினை படிக்கவும் வெற்றி பெறவும் !!!

English summary
here article tell about tnpsc Tamil practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia