போட்டி தேர்வை வெல்ல தமிழ் கேள்விபதில்களின் தொகுப்பு !!!

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வில் போட்டி தேர்வு எழுதுவோர்க்கு என்றும் பக்கபலமாக இருப்பது மொழிப்பாடபகுதி கேள்விகள் ஆகும் . ஆனால் மொழிஅறிவு பாடத்தில் நாம் எதையும் எளிதில் எடுத்துகொள்ள இயலாது . மொழி பாடம் என்பது பரந்து விரிந்த பகுதி அவற்றை ஆழ படிக்க வேண்டும் அப்பொழுதான் நம்மால் எளிதாக எந்த கேள்வியையும் எதிர்கொள்ள முடியும் . வெற்றி என்னும் பாதையை வகுத்து தருவதில் மொழிப்பாடத்திற்கு பெரும் பங்குண்டு. மொழிப் பாடத்தை நாம் புரிந்துகொள்வதிலும்  செயல்படுத்துவதிலும் இருக்கும் இடைவெளியினை அறிந்தால்   நம்மை முழுவதும் அந்த பாடத்தினை வெற்றிகொள்ள வைக்கும்.

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தமிழ்கேள்வி பதில்கள் படிக்க வேண்டும்

மொழி அறிவில் நூறு மதிபெண் பெறுவது என்பது நம்மை தேர்வில் வெல்ல வைக்கும் பிரம்மாஸ்திரம்  ஆகும் அதனை பெற கடின உழைப்பு அது சார்ந்த கவனம் இருப்பின் எளிதில் வெல்லலாம்.

1 திருத்தி எழுதிய தீர்ப்புகள் என்ற கவி நூலின் ஆசிரியர்

விடை : வைரமுத்து

2 திருபுகழ் பாடியவர்

விடை : அருணகிரிநாதர்

3 குட்டி திருவாசகம் என அழைக்கப்படுவது

விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி

4 இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுபவர்

விடை: பாணினி

5 வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது

விடை: பட்டினப்பாலை

6 மாதேவடிகள் எனப்படுபவர் யார்

விடை: சேக்கிழார்

7 மந்திர மாலை என்னும் நூலின் ஆசிரியர்

விடை: தத்துவ போதக சுவாமிகள்

8 தாமரைதடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது

விடை: கால்டுவெல்

9 குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எத்தனை

விடை: 400

10 சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்க நூல் எது

விடை: பதிற்றுபத்து

சார்ந்த பதிவுகள்:

பொதுஅறிவு கேள்விகளின் தொகுப்பு படிக்கவும் தேர்வுக்கு பயன்படுத்தவும்  

பொதுஅறிவு பகுதி கேள்வி தொகுப்பு படியுங்கள் 

போட்டி தேர்வுக்கான பொதுஅறிவு பயிற்சி கேள்விகள்

English summary
here article tell about tamil practice questions for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia