டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவோர்கள் படிக்கவேண்டிய தமிழ் மொழிப்பாடத்திற்க்கான கேள்வி பதில்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு முக்கியமான ஒரு பகுதியாக இருப்பது மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு மதிபெண் பெட்டகமாக இருக்கும் மொழிப்பாடத்தில் இருந்து கேள்விகள் பெறலாம் . போட்டி தேர்வுக்கு தயாராவோர்களுக்கான தமிழ் கேள்வி பதில்கள் படியுங்கள் வெற்றி பெறுங்கள் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதும் அனைவரும் தமிழை நன்றாக படியுங்கள்

மொழிப்பாடமானது போட்டி தேர்வு எழுதுவோர்க்கு மிகவும் அவசியம் ஆகும் . தமிழ் மொழியில் இலக்கணம், செய்யுள், உரைநடை மற்றும் துணைபாடப்பகுதி அத்துடன், கவிஞர்கள் , கவிதைகள் என பிரிக்கலாம் .

1 நம் முன்னோர் ஒரு பொருளுக்கு காரணம் கருதாமல் இட்டு வழங்கிய பெயரை எவ்வாறு அழைப்போம்

விடை: இடுகுறி பெயர்

2 பொருளுக்கு காரணம் இட்டு வழங்கிய பெயரை எவ்வாறு அழைப்போம்

விடை : காரணப் பெயர்

3 வியங்கோல் விணைமுற்று வரும் இடங்கள் யாவை

விடை: மூவிடங்களிலும் , ஐம்பால்களிலும் வரும்

4 செயல் நிகழ்வதைக்காட்டும்

விடை: உடன்பாட்டு விணைமுற்று

5 பெயரெச்சம் என்பது

விடை: பெயர்சொல்லை ஏற்றுஒரு தொடர் பொருள் முடிவு பெறும் எச்ச விணைச்சொல் பெயரெச்சம் ஆகும்

6 தெரிநிலை பெயரெச்சம் என்பது

விடை: காலம் செயல் உணர்த்தி நின்று செய்பவன் , கருவி, நிலம் , காலம், செய்பொருள் என்னும் ஆறுவகை பெயர்கள் ஒன்றனை கொண்டு முடியும் எச்ச சொல் தெரிநிலை பெயரெச்சம் ஆகும் .

7 ஒரு பொருட் பண்மொழி என்பது

விடை: பொருள் சிறப்புக்காக ஒரு பொருளை குறிக்க பல சொற்கள் வருவது ஒரு பன்மொழி ஆகும்

8 ஒரு எழுத்து நிற்கவேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வந்தாலும் பெயர் மாறுபடவில்லையாயின் அதனை என்னவென அழைப்பார்

விடை: போலி

9 முதற்போலி என்பது யாது

விடை: சொல்லின் முதல் எழுத்து திரிந்து பொருள் வேறுபடாமல் வருவது முதற்போலி

10 கடைபோலி வேறு பெயர்

விடை: ஈற்றுப்போலி

சார்ந்த பதிவுகள் :

போட்டிதேர்வுக்கு தயாராகும் அனைவரும் படிக்க நடப்பு நிகழ்வுகள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு எழுதிறிங்களா அப்ப படிங்க நடப்பு கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் பயிற்சி நடப்பு நிகழ்வுகள்

English summary
here article tell about tnpsc tamil practice questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia