போட்டி தேர்வு எழுதுவோர்க்கான தமிழ் வினாவிடை தொகுப்பு

Posted By:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி வாரியம் நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ , குரூப் 4, விஏஓ, அறநிலைத்துறை தேர்வுகளுக்கு முக்கிய தேவையான பகுதியாக இருப்பது  மொழி அறிவாகும்  அவற்றில் அதிகமானோர் தேர்ந்தெடுப்பது பொதுதமிழ் ஆகும். போட்டி தேர்வில் வெற்றி பெற முக்கிய பங்கு வகிப்பது பொது தமிழ் ஆகும் .

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற மொழிப்பாடத்தில் நூறு மதிபெண்கள் பெற வேண்டும்

பொது தமிழ் கேள்விகள் பெரும்பாலும் பள்ளி பாடபுத்தகங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன . பொது தமிழ் கேள்விகள் அனைத்தையும் எழுதி முழுமதிபெண்கள் பெற பாடபுத்தகங்களை நன்றாக படிக்க வேண்டும் . 90 சதவீகிதம் கேள்விகளுக்கு எளிதில் விடையளிக்கலாம் 10 சதவீகித கேள்விகளில் விழிப்புணர்வுடன் விடையளிக்க வேண்டும் .

1 செய்யுளில் ஓசை குறையாத போது செவிக்கு இனிய இசை தரும்பொருட்டு உயிர் குறில் உயிர் நெடிலாக அளபெடுத்தல் யாவை

விடை: இன்னிசை அளபெடை

2 கு, சு, டு, து, பு, று யாவை

விடை: ஆறு வல்லின உகர எழுத்துக்கள்

3 திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

விடை: ஜி.யூ.போப்

4 கல்வியைவிட ஒழுக்கமே சிறந்தது என கூறும் நூல்

விடை: முதுமொழிக்காஞ்சி

5 அறிவுரைகோவை என அழைக்கப்படுவது யாது

விடை: முதுமொழி காஞ்சி

6 சமண காப்பியங்கள் யாவை

விடை: சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, வளையாபதி

7 தமிழில் தோன்றிய முதல் உலா யாது

விடை: திருக்கயிலாய ஞானஉலா

8 பிள்ளைத்தமிழ் எந்த சந்தத்தால் ஆனவை

விடை: கழிநெடிலாசிரியச் சந்தவிருத்தத்தால்

9 மகாவித்துவான் மீனாட்சிசுந்திரம்பிள்ளை பாடிய பிள்ளைத்தமிழ் நூல்கள்

விடை: சேக்கிழார் பிள்ளைத்தமிழ், முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்

10 இரட்டையர் பாடிய கலம்பக நூல்கள் யாவை

விடை: திருவாமாத்தூர்க் கலம்பகம் , தில்லைக் கலம்பகம்

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள்

 டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத படிக்கிறிங்களா அப்போ நடப்பு நிகழ்வுகள் படிங்க,,!! 

கேரியர் இந்தியா தமிழ் கல்விதளத்தின் தமிழ்வினா விடைகள் !!

English summary
here article tell about tamil question bank for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia