11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதி (இன்று) வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் செல்போன் குறுஞ்செய்தி மூலமாகவே பட்டியலை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வுகளை நடத்துவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, 1ம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 12ம் வகுப்பில் அனைத்துத் தேர்வுகளிலும் பங்கேற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இருப்பினும், சில மாணவர்கள் ஊரடங்கின் காரணமாக 12ம் வகுப்பு இறுதித் தேர்வில் பங்கேற்காத நிலையில், அவர்களுக்கு மறு தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 27ம் தேதி தேர்வும் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், தற்போது 11-ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் மற்றும் 12ம் வகுப்பு மறுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இத்தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதளத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "11ம் வகுப்புத் தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும் 12ம் வகுப்பு மறு தேர்வு முடிவும் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications












