மிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பல்கலைக்கழக தேர்வுகளை எழுதிய மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள முகவரியை அணுகி முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
டிஎன்ஓயு என்று அழைக்கப்படும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (Tamil Nadu Open University அல்லது TNOU) இந்தியாவில் தமிழ்நாடு மாநில அரசினால் நிறுவப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகமாகும். தமிழகச் சட்டப்பேரவை இயற்றிய (2002ஆம் ஆண்டின் எண் 27) சட்டத்தின் கீழ் உயர்கல்வித் தொடரவியலாத ஆதரவற்றோருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள ஆண்கள், பெண்களுக்காகவும் இன்னும் பிற காரணங்களுக்காக பள்ளிக்கல்வியை தொடராதவர்களுக்கும் பயன்தருமாறு இப்பல்கலைகழகம் நிறுவப் பெற்றுள்ளது.
பல பாடத்திட்டங்களில் பட்டய, சான்றிதழ், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடதிட்டங்களை இந்த பல்கலைக்கழமானது வழங்குகிறது. இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் போன்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் மாணவச் செல்வங்கள் சேருவது மிகவும் எளிதாக மாற்றப்பட்டிருக்கிறது. தேர்வுகளும் மாணவர்கள் வேண்டியவாறு எடுத்துக்கொள்ளுமாறு அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த நிறுவனத்தில் வழங்கப்படும் பணிசார் பாடங்கள் (vocational courses) செய்தொழிலில் அறிவுப்பெறவும் புதிய வேலை வாய்ப்புகளை மாணவர்கள் வளர்க்கவும் பயனுள்ளதாக உள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் நேற்று
ளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமானது முதுகலை, இளங்கலை, டிப்ளமோ சான்றிதழ் மற்றும் தொழில்சார் படிப்புகளை மாணவர்களுக்காகப் பயிற்றுவித்து வருகிறது.
இந்நிலையில் முதுகலை, இளங்கலை, டிப்ளமோ சான்றிதழ் மற்றும் தொழில்சார் படிப்புகளுக்கான ஜனவரி பருவ இறுதி தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி முதல் ஏப்ரல் 7-ம் தேதி வரை பல்வேறு மையங்களில் நடைபெற்று முடிவடைந்தன.
இந்நிலையில் இந்தத் தேர்வுகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்துவிட்டது.
இதைத் தொடர்ந்து இத்தேர்வுகளின் முடிவுகள் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.tnou.ac.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள்
இந்த இணையதளத்துக்குச் சென்று தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி விவரங்களை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
இவ்வாறு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜி.ஆர்.செந்தில் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












