அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு! மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு!

அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அதிரடியான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆன்லைன் வழியிலான தேர்வில் மாணவர்கள் பலரும் தேர்ச்சி பெறாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு! மீண்டும் தேர்வு நடத்த தமிழக அரசு முடிவு!

இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திற்கு தமிழக முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் அதிரடியான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு

கொரோனா தொற்றின் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துச் சேவைகளும் முடக்கப்பட்டன. குறிப்பாக, பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்கலைக் கழக வகுப்புகள்

பல்கலைக் கழக வகுப்புகள்

தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கல்லூரி, பல்கலைக் கழகங்களின் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது.

புத்தகத்தை பார்த்தே தேர்வு

புத்தகத்தை பார்த்தே தேர்வு

அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் முறையிலேயே தேர்வு நடைபெறும் என்றும், மேலும், மாணவர்கள் புத்தகத்தை திறந்து வைத்து, பார்த்தபடியே தேர்வுகளை எழுதலாம் என்றும் அனுமதி வழங்கியதை அடுத்து தேர்வும் நடைபெற்று முடிந்தது.

தேர்வு முடிவில் முறைகேடு

தேர்வு முடிவில் முறைகேடு

இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. அவ்வாறு வெளியான தேர்வு முடிவுகள் மாணவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களை உருவாக்கியது. தேர்வு எழுதிய மாணவர்களில் 70 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்தனர்.

மாணவர்கள் குற்றச்சாட்டு

மாணவர்கள் குற்றச்சாட்டு

இது குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகையில், தேர்வு எழுதும் மாணவர்கள் கேமராவை விட்டு சற்று திரும்பினால் கூட அவர்கள் தேர்வுகளில் முறைகேடுகளைச் செய்ததாக கருதப்பட்டுள்ளது. இதனால் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் கூட தேர்வில் தோல்வியடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆன்லைன் தேர்வு முறையை மாற்றாவிட்டால் பொறியியல் படிப்பை மாணவர்கள் பலரும் கைவிடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் அதிரடி

தமிழக முதலமைச்சர் அதிரடி

இந்நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா, பாரதிதாசன், பாரதியார், சென்னை, அன்னை தெரசா, திருவள்ளுவர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களும் பங்கேற்றனர்.

மறு தேர்வு நடத்த முடிவு

மறு தேர்வு நடத்த முடிவு

இந்தக் கூட்டத்திற்கு பின் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதன் எதிரொலியாக மறு தேர்வு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கவனத்திற்கு

மாணவர்கள் கவனத்திற்கு

தற்போது நடைபெறவுள்ள மறு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுடன் வெற்றி பெற்றவர்களும் எழுதலாம் எனவும், பிற மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu government conduct re-exam for Anna University engineering students
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+