நடப்பு ஆண்டு முதல் 8-ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு புதிய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷா ராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
நடப்பு கல்வியாண்டு முதல் (2019- 2020) எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, புதிய பாடத்திட்டத்தின்படியே வரும் ஏப்ரல் மாதம் தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்படும்.
மேலும், ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் எழுதிக் கொள்ளலாம். இதற்கான தேர்வு கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2020, ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழ், ஏப்ரல் 3- ஆங்கிலம், ஏப்ரல் 7-கணிதம், ஏப்ரல் 8-அறிவியல், ஏப்ரல் 9- சமூக அறிவியல் ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகள் அனைத்தும் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












