தமிழகத்தில் 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் வரும் மே 8-ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 6-ஆம் தேதி முதல் துவங்கி மார்ச் 22ம் தேதி வரையில் நடைபெற்றது. இதில், 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,618 மாணவ, மாணவியர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் 5,032 பேர் என மொத்தமாக 8,21, 650 பேர் பங்கேற்றனர்.
இதில், இந்த ஆண்டு 11ம் வகுப்பிற்கு புதிய பாடத் திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இத்தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து ஏற்கெனவே திட்டமிட்டபடி வரும் மே 8ம் தேதியன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.