தமிழகம், புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த 10-வம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடைபெற்றது. இதில், 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இத்தேர்விற்கான முடிவுகள் இன்று (ஏப்ரல் 29) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள், இதன் முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம்.
இந்த வருடம், மாணவிகள் மற்றும் மாணவர்கள் என மொத்தமாக 95.02 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 97 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் மாணவர்கள் 93.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டங்கள் வாரியான பட்டியலில் திருப்பூர் மாவட்டம், 98.53 சதவிகிதம் பெற்று முதலிடத்திலும், அதற்கடுத்தப்படியாக இராமநாதபுரம் 98.48 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடத்திலும், நாமக்கல் மாவட்டம், 98.45 சதவிகிதத்தில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே-2ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி தேர்வர்கள், மே-6ஆம் தேதி முதல் http://www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












