மாணவ, மாணவியரே.. உங்களுக்காகவே சூப்பரான ஹெல்த் டிப்ஸ்கள்!

மாணவ மாணவியர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான நேரத்தில் உடல் நலமுடன் இருப்பதும் அவசியமாகும்.

சென்னை : உடல் ஆரோக்கியம் முதலில் ரொம்ப ரொம்ப முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது ஆரோக்கியமானதாகும்.

தேர்வுகளில் பிசியாக இருக்கும் மாணவர்களே,
உங்களுக்காக சில டிப்ஸ்கள். இதை பாலோ செய்தால் நிச்சயம் நல்ல புத்துணர்ச்சியைப் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை.

வாருங்கள் அந்த டிப்ஸ்களை ஒரு பார்வை பார்ப்போம்.

காலை உணவு அவசியம்

காலை உணவு அவசியம்

மாணவர்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தை கையாள வேண்டும். கண்டிப்பாக காலை உணவினைத் தடை செய்யக் கூடாது. மாணவர்கள் கோடைக்காலம் நெருங்கி விட்டதால் நீர் ஆகாரங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும்.

காய்கறிகள் நிறைய சாப்பிடவும்

காய்கறிகள் நிறைய சாப்பிடவும்

உணவில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல முளைக் கட்டி தானியங்களையும் மாணவர்கள் எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்ததாகும்.

முளை கட்டிய தானியம்
 

முளை கட்டிய தானியம்

காலை உணவினைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். மதிய உணவில் சத்தான காய்கறிகளை உண்ண வேண்டும். மாலை வேளைகளில் முளைக்கட்டிய தானியம், நட்ஸ், சுண்டல், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது நல்லது. இரவு உணவினை 7.30 முதல் 8.30க்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு படுக்கை அறைக்கு செல்லும் முன் ஒரு டம்ளர் பால் எடுத்துக் கொள்வது நல்லது.

தூக்கம் முக்கியம்

தூக்கம் முக்கியம்

சரியான நேரத்தில் தூங்கி சரியான நேரத்தில் எழுந்திருப்பது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான வழி முறைகளாகும். பகலில் தூங்கும் போது வளர்சிதை மாற்றம் குறையத் தொடங்கி விடும். இரவில் தூங்காமல் விழித்திருந்து படிப்பதால் வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது.

வீட்டுச் சாப்பாடு முக்கியம்

வீட்டுச் சாப்பாடு முக்கியம்

மாணவ மாணவியர்கள் பரீட்சை முடிந்து வெளியே வரும் போது வெயில் மற்றும் பசி மயக்கத்தால் வெளியே விற்கும் சுகாதாரம் அற்ற உணவுப்பொருட்களை வாங்கி உண்ணக் கூடாது. வீட்டில் இருந்தே தண்ணீர் சாப்பாடு எல்லாவற்றையும் எடுத்துச் செல்ல வேண்டும். நீர் மோர் ஒரு பாட்டிலில் தினமும் பள்ளிக்கு எடுத்துச் செல்லுங்கள் பரீட்சை முடிந்து வெளியே வந்ததும் குடியுங்கள் மனதும் உடலும் குளிர்ச்சியாக மாறிவிடும்.

தண்ணீர் அதிகமாக குடிங்க

தண்ணீர் அதிகமாக குடிங்க

வெயில் நேரம் என்பதால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். தர்பூசணி, வெள்ளரிக்காய், சுரைக்காய் போன்றவற்றை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதாகும். இளநீர், நீர்மோர், பதநீர், பழச்சாறு, நொங்கு, போன்ற குளிர் பானங்களை அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது. செயற்கை குளிர்பானங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைக்கும். நொறுக்குத் தீனிகளை அதிகம் உண்ணுவது கூடாது. அளவோடு உண்ண வேண்டும்.

ஜூஸ் நல்லது

ஜூஸ் நல்லது

எலுமிச்சை ஆரஞ்சு ஜீஸ் வெயில் இருந்து விடுபட உகந்த மற்றும் மலிவான குளிர்பானங்களாகும். நாம் வீட்டிலேயே இவைகளை எளிதாக தயாரித்து அருந்தலாம். உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் மிகவும் அவசியமான ஒன்றாகும். இரண்டுமே ஆரோக்கியமாக இருக்கும் போதுதான் மூளை சுறுசுறுப்பாக செயல்படும். அதிக உஷ்ணம், அதிக குளிர்ச்சி இரண்டுமே ஆபத்தானதுதான். உடல் ஆரோக்கியத்தைச் சீராக வைத்திருப்பது மிகவும் அசியமானதாகும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Health is very important for all. especially students health is very important at the time of examination. some health tips are provided for you.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X