10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... நாளை வெளியாகிறது!

Posted By:

சென்னை: தமிழகத்தில் நாளை 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 29ம் தேதி வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... நாளை வெளியாகிறது!

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டை இணையதளத்தில் குறிப்பிட்டு, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களின், தேசிய தகவலியல் மையங்கள் மைய மற்றும் கிளை நூலகங்கள் மற்றும் படித்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, மே 29ம் தேதி முதல், மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலும் பெற்றுக் கொள்ளலாம். இணைய தளத்தில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, ஜூன் 4ம் தேதி முதல், தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The students are eagerly waiting to know their marks as the SSLC exam results to be declared tomorrow.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia