10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு உட்பட்ட அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே நடைபெறவுள்ளன.

மார்ச் மாதம் தமிழகத்தில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள நேரடி தனித்தேர்வர்கள் மற்றும் ஏற்கெனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அதில், தேர்ச்சி பெறாத தனித் தேர்வர்கள் தற்போது நடைபெறவுள்ள தேர்வுகளில் தவறாமல் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் பெறாத விண்ணப்பதாரர்கள் செய்முறைத் தேர்வு நடைபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்புகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
education school exam result central government student tamilnadu கல்வி மத்திய அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு தமிழகம்
English summary
School Education Department Advice For 10th Practical Exam
Story first published: Saturday, February 23, 2019, 13:43 [IST]


Click it and Unblock the Notifications












