எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளரிக்கல் என்னும் இளநிலை அலுவலர் பணியிடங்களுக்கான முக்கியத் தேர்விற்கு நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் இளநிலை அலுவலர் (கஸ்டர்மர் சப்போர்ட் & சேல்ஸ்) பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கானத் தேர்வை பொதுத்துறை வங்கி பணியாளர் தேர்வாணையமான ஐபிபிஸ் அமைப்பு நடத்துகிறது.
இதில், முதல்நிலை தேர்வு மற்றும் பிரதானத் தேர்வு என இரண்டு கட்டமாக தேர்வு நடைபெறுவது வழக்கம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி, மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் முதல்நிலை தேர்வு நடைபெற்றது.
இதனிடையே, முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து இன்றே மெயின் தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ் இணையதளத்திற்குச் சென்று அட்மிட் கார்டு டவுன்லோட் தளத்தில் இதனை பதிவிறக்கம் செய்யலாம். ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று மெயின் தேர்வு நடைபெறும்.


Click it and Unblock the Notifications












