டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க

போட்டி தேர்வினை வெற்றிகரமாக முடிக்க தொடர்ந்து படிங்க அப்பொழுதுதான் நீங்கள் வெற்றி பெற முடியும்.

By Sobana

எந்த ஒரு விஷயத்தையும் இஷ்டப்பட்டுப் படித்தால் கஷ்டமாகத் தெரியாது. பானிபட் போர் எப்போது நடந்தது என்றால், 1526 இருக்குமோ என்பவர்களே அதிகம். படித்தது மறந்துவிடுவதற்குக் காரணம், மீண்டும், மீண்டும் படிக்காமல் இருப்பதுதான்.

போட்டி தேர்வை வெல்ல கேள்வி பதில்கள் படிங்க

ஒருசிலருக்கு, குறிப்பெடுத்துப் படிப்பது நன்றாக இருக்கும். இன்னும் சிலருக்கு, அடிக்கோடிட்டு படிப்பது பிடிக்கும். ஆக, யாருக்கு எந்த வழி பிடிக்குமோ அப்படியே படிக்கலாம்.

1. மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு எது?

1. மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு எது?

1. தோல்
2. மூளை
3. நுரையீரல்
4. கணையம்

விடை:1. தோல்

விளக்கம்: இது உடலுக்கு பாதுக்காப்பு அரணாக விளங்குகிறது. தோலின் மேற்புற எல்லை எபிடெர்மிஸ் (அ) மேற்புறத்தோல் என்று அழைக்கப்படுகிறது. இது நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், உடலிலிருந்து நீர் ஆவியாதலைத் தடுத்தல், போன்ற பணிகளை செய்கின்றன.

 

2. ஒளிச்செறிவின் அலகு என்ன?

2. ஒளிச்செறிவின் அலகு என்ன?

1. நியுட்டன்
2. மோல்
3. ரேடியன்
4. கேண்டெலா

விடை: 4. கேண்டெலா

விளக்கம்: ஒளிச்செறிவின் அலகு கேண்டெலா (cd). ஒளிச்செறிவு (luminous intensity) என்பது ஒளி அளவியலில் ஒரு குறிப்பிட்ட திசையில் ஒரு திண்மக் கோணத்திற்கு மனிதக் கண்ணின் சீர்தரப்படுத்தப்பட்ட உணர்திறனான ஒளிர்வு சார்பை அடிப்படையாகக் கொண்டு அலைநீளத்தை நிறைசெய்து வெளியிடப்பட்ட ஒளியின் ஆற்றல் ஆகும்.

 

3. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?
 

3. முதல் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு?

1. 1562
2. 1526
3. 1546
4. 1556

விடை: 2. 1526

விளக்கம்: தற்போதைய ஹரியானாவின் பானிபட் என்ற இடத்தில் பாபருக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடிக்கும் இடையே, 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரில்தான் ரூமி எனப்படும் பீரங்கி படைகளை முதன்முதலில் பாபர் பயன்படுத்தினார். இப்போர் இந்தியாவை ஆண்ட ஆப்கானியர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

 

4. ஆந்திரா- தமிழ்நாடு கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தம் கைஎழுத்தான ஆண்டு?

4. ஆந்திரா- தமிழ்நாடு கிருஷ்ணா நதி நீர் திட்ட ஒப்பந்தம் கைஎழுத்தான ஆண்டு?

1. 1983
2. 1996
3. 1985
4. 1995

விடை:1.1983

விளக்கம்: இந்த திட்டமானது கிருஷ்ணா நதியில் இருந்து சென்னைக்கு 15 டிஎம்சி குடிநீர் கொண்டு வரும் திட்டமாகும். 14.4.1983 தமிழகம்- ஆந்திர அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. செப்டம்பர் 1996 முதல் கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து நீர் 152 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக பூண்டி நீர்தேக்கத்திற்கு வருகிறது.

 

5. இந்திய அருமண் தொழிற்சாலை  அமைந்துள்ள இடம்  எது?

5. இந்திய அருமண் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

1.கன்னியாகுமரி
2.திருநெல்வேலி
3.நாகப்பட்டினம்

விடை: 1. கன்னியாகுமரி

விளக்கம்:  அருமண் கனிமங்கள் என்பவை 17 தனிமங்கள் அடங்கிய தொகுதியாகும். இவை பூமியில் குறைவான செறிவில் காணப்படுகின்றன. இவற்றைப் பிரித்தெடுப்பதற்கு அதிக பொருட் செலவாகும். உலகம் முழுவதும் நடைபெறும் அருமண் கனிம வர்த்தகத்தில் சீனாவின் அருமண் தொழில் வர்த்தகம் 97 சதவீதம் ஆகும்.

 

6. இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் மாவட்டம் எது?

6. இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படும் மாவட்டம் எது?

1. காஞ்சிபுரம்
2. சென்னை
3. மேட்டூர்
4. கோவை

விடை: 1. காஞ்சிபுரம்

விளக்கம்: உலகின் சிறந்த கார் தொழிற்சாலைகளான போர்டு, பி.எம்.டபுள்யூ இங்கு அமைந்துள்ளன. பல்வர்காலத்தைச் சேர்ந்த மாமல்லபுரம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகியவை இம்மாவட்டத்தை சேர்ந்தவை.

 

7. தேசிய நுகர்வோர் தினம்?

7. தேசிய நுகர்வோர் தினம்?

1. டிசம்பர் 14
2. ஜனவரி 15
3. மே 6
4. டிசம்பர்24

விடை: 4. டிசம்பர் 24

விளக்கம்: ஆரோக்கியமான சமுதாயம் உருவாக நுகர்வோர் பாதுகாப்பு மிகவும் அவசியம். அதனால்தான் கடந்த 1986-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டது. நுகர்வோருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா-2017 என்ற புதிய திருத்த மசோதாவை தயாரித்து உள்ளது. இந்த மசோதா, நுகர்வோருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதுடன், இதற்காக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை அமைக்கவும் வழிவகுக்கிறது.

 

8. சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு?

8. சந்திரன் பூமியை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு?

1. 30
2. 27
3. 15
4. 14

விடை: 2. 27

விளக்கம்: சந்திரன் பூமியைச் சுற்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு - 27.3 நாள்கள். சந்திரனின் மறுபக்கத்தை புகைப்படம் எடுத்த செயற்கைக்கோளின் பெயர் லூனா 3- 1959ஆம் ஆண்டு. அமாவாசையன்று பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் அமைகிறது. முழுச்சந்திரன் (பௌர்ணமி) அன்று சூரியனுக்கு எதிர்த்திசையில் காட்சி அளிக்கும்.

 

9. 'loma prieta earthquake' பூகம்பம் நிகழ்ந்த ஆண்டு?

9. 'loma prieta earthquake' பூகம்பம் நிகழ்ந்த ஆண்டு?

1.1989
2.1994
3.1995
4.1999

விடை:1. 1989

விளக்கம்: பணச் செழிப்பும், பண்டச் செழிப்பும் மிகுந்து, ஆடம்பரம் நிரம்பி வழியும் சொர்க்க பூமியான, காலிஃபோர்னியா கடற்கரைப் பகுதிகளில் அடிக்கடி நேரும் அசம்பாவிதங்களில் பூகம்பமும் ஒன்று. 1989 ஸான் பிரான்ஸிஸ்கோ பூகம்பத்தின் கோர விளைவு 63 பேர் உயிரிழந்தனர். 3,757 பேர் காயமடைந்தனர்.

 

10. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்?

10. ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்?

1. அவுரங்கசீப்
2. அலாவுதீன் கில்ஜி
3. அக்பர்
4. ஜஹாங்கீர்

விடை: 2. அலாவுதீன் கில்ஜி

விளக்கம்: அலாவுதீன் கில்ஜி இயற் பெயர்: சுனா கான் கில்சி (Juna Khan Khilji). இந்தியாவை ஆண்ட இரண்டாவது துருக்கி-ஆப்கானிய கலப்பினத்தை சேர்ந்தவர். கில்ஜி குல சுல்தான்களில் மிகவும் வலுவான ஆட்சியாளர். ஜலாலுதீன் கில்ஜிக்குப் பின் 1296 முதல் 1316 வரை இருபது ஆண்டுகள், தில்லியை ஆட்சி செய்தார்.

 

 

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வில் வெற்றியைக் கைவசமாக்க கேள்வி பதில்கள் இதோ! போட்டி தேர்வில் வெற்றியைக் கைவசமாக்க கேள்வி பதில்கள் இதோ!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The article tells about tnpsc questions for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X