அரசு வேலையான டிஎன்பிஎஸ்சி வேலை பெற கேள்விகளின் தொகுப்பு

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் தொகுப்பு படிக்கும் பொழுது தேர்வர்களுக்கான ஐடியாக்கள் நிறைய கிடைக்கும் அடுத்தஅடுத்த பாடங்களை தொடர்ந்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்.

உணமையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் எனற கவி நடையை இங்கே உணர்ந்து படித்தால் பணிவாய்ப்பு உங்கள் கைவசம் இருக்கும் என மாற்றி படியுங்கள் உங்கள் வெற்றி உங்களது கைக்குள் அடங்கும்.

1.ஆசிய மல்யுத்தப்போட்டியில் முதன் முதலாக பதக்கம் வென்றது யார்?

1. வினேஷ் போகாட்
2. அஞ்சு
3. சௌமியா
விடை: 1. வினேஷ் போகாட்

விளக்கம் :
கிர்கிஸ்தானில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்று ஆட்டத்தில் ப்ரீ ஸ்டைல் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகாட் வெள்ளி வென்றார். இந்தியாவின் சார்பாக இறுதி போட்டியில் தோற்றாலும் முதன் முறையாக வெள்ளி வென்றுள்ளார்.

 

2. எந்த இந்திய நகரத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி தொடங்கப்பட்டுள்ளது?

1.  தமிழ்நாடு
2. கர்நாடாகா
3. மகாராஷ்டிரா
விடை: 2. கர்நாடாகா
விளக்கம் :
கர்நாடாகாவில் தும்கூரு மாவட்டத்தில் உள்ள பவகாடா பகுதியில் மிகபெரிய சூரிய மின்சக்தி பூங்கா எங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்சக்தி பூங்கா மூலம் 2 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்சக்தியை பெற முடியும்.

Image source

3. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கம் என்ன?

1. முழுமையாக சுதாதார வசதி பெறல்
2.  தூய்மை திட்டத்தின் அடுத்த இலக்கு
3.   சித்தா முன்னேற்றம்
விடை: 1 முழுமையாக சுதாதார வசதி பெறல்
விளக்கம் :

ஆயுஷ்மான பாரத் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக முழுமையான சுகாதரத்திற்கான இரண்டு பெரும் முயற்சிகள் அரசு அறிவித்துள்ளது.
1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள் மக்களை மையப்படுத்தி முழுமையான முதல்கட்ட சுகாதார சேவையை அளிக்கும். பத்து கோடி அதிகாமான ஏழை குடும்பத்திற்கு 5 லட்சம் வரை இரண்டாவது கட்ட மற்றும் மூன்றாவது கட்ட மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்படும்.

 

4. தூத்துக்குடி துறைமுகத்தில் சமிமபத்தில் செய்துள்ள சாதனை என்ன?

1 கந்தக அமிலம் இறக்குமதி செய்து சாதனை
2 யுரோனியம் ஏற்றுமதி செய்திருக்கின்றது
3 அதிக கப்பல்கள் நிறுத்துமிடம் கொண்ட பெரிய சாதனை
விடை: 1 கந்தக அமிலம் இறக்குமதி செய்து சாதனை
விளக்கம்:
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் முதன் முறையாக கந்தக அமிலத்தை இறக்குமதி செய்து சாதனை புரிந்துள்ளது.
அமி என்ற கப்பல் 18 ஆயிரத்து 965 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வ.உ.சி துறைமுகத்தை வந்தடைதுள்ளது.

5. ஜிமினாஸ்டிக்கில் இந்தியா சமிபத்தில் செய்துள்ள சாதனை எது?

1. 43 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்றது.
2. 2 பதக்கங்கள் வெற்றி பெற்றுள்ளன
3.   அதிக ஜிம்னாஸ்டிக் விளையாட்டு வீரர்கள் இந்தியா சார்பில் கலந்து கொண்டு சாதனை
விடை: 1. 43 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்றது.

விளக்கம்: 43 ஆண்டுகால உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்றது. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெறும் உலக கோப்பை ஜிம்னாஷ்டிக் போட்டியில் இந்தியாவின் அருணா ரெட்டி வெண்கல பதக்கம் வென்றதன் மூலம் இந்த வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளது.

 

6. இந்தியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானத்தின் பெயர் என்ன?

1. ரஷ்டம் 2
2. காரிகாஷ்
3.  ஆகாஷ்
விடை: 1.ரஷ்டம் 2
விளக்கம்
:
இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அளில்லா உளவு விமானமான ரஷ்டம் 2 வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்திய பாதுகப்பு ஆராய்ச்சி நிறுவனமான டிஆர்டிஒ அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரோன்கள் போல திறன் கொண்டுள்ளது என அறிவித்துள்ளது.

7. சுதந்திரமடைந்து 70 ஆண்களுக்குப் பின் மின்சாரம் பெற்ற இந்திய பகுதி எது?

1.  மும்பை அருகே உள்ள காரபுரி தீவில் எலிபாண்டா குகை
2. அஜந்தா
3.   கொல்லிமலை
விடை: 1 மும்பை அருகே உள்ள காரபுரி தீவில் எலிபாண்டா குகை
விளக்கம்:

எலிபெண்டா குகை எனும் யுனெஸ்கோவால் சான்று அளிக்கப்பட்ட உலக பாரம்பரிய குகை ஒன்றுள்ளது. இந்த பகுதி மும்பையிலிருந்து சுமார் 7.5 கிமீ கடல்வழி பயனத்தில் அமைந்துள்ளது. எலி சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக மின்சாரம் பெற்றுள்ளன

 

8. இந்திய பெருங்கடலில் சீனாவின் அதிக்கத்தை தடுக்க ராணுவ தளம் எங்க அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது?

1.  தாரா
2. ஹவேலி
3. செசல்ஸ் தீவு
விடை: 3. செசல்ஸ் தீவு
விளக்கம்:
இந்தியா செசல்ஸ் நாடுகள் கூட்டு ராணுவ பயிற்சி செசல்ஸ் நாட்டிலுள்ள மாஹி தீவில் தொடங்கியுள்ளன. உலகளவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா கடும் முயற்சி எடுத்து வருகிறது. இந்தியா செசல்ஸ் நாட்டில் உள்ள மாஹி தீவில் தொடங்கியுள்ளன.

9. இந்திய மகளிர்கடற்படை எதனை கடந்து சாதனை செய்துள்ளது?

1.  கடலின் எவரெஸ்ட் என அழைக்கப்படும் ஹேப் காரான்
2. இமாலய மலையை ஏரி சாதனை
3.  தென் கடலை தாண்டி சென்றது
விடை: 1.  கடலின் எவரெஸ்ட் என அழைக்கப்படும் ஹேப் காரான்
விளக்கம் : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதை போன்று மிகவும் கடினமானது என சொல்லப்படும். ஹேப் காரன் தென் அமெரிக்க கடல் பகுதிக்கும் அட்லாண்டிக் பகுதியின் தென்மேற்கு பகுதியையும், பசிபிக் கடலின் தென்கிழக்கு பகுதியையும் இந்த கேப் ஹாரன் பகுதி இணைக்கின்றது. இதனை கடல்பகுதியின் சிகரம் என அழைக்கப்படுகின்றது இதனை இந்திய மகளிர் கடற்படையினர் தாண்டி சென்றனர். 

 

 

 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க 

 

English summary
The article tells about tnpsc question for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia